பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. 16. 17. 18. 19. 20. 21. 22. 56 இவை எல்லாம் இரு முனைகள் வழியாகச் செல்வதே இதற்குக் காரணம். - புவிமேல் மொத்தம் எத்தனை நெடுக்குக்கோடுகள் வரையலாம்? 360 நெடுக்குக் கோடுகள். நெடுக்குக்கோட்டின் பயன்கள் யாவை? 1. ஒரிடத்தைத் துல்லியமாகக் கணக்கிடலாம். 2. புவியில் வெவ்வேறு இடங்களில் நேரத்தைக் கணக்கிட உதவும். ஒவ்வொரு நெடுக்குக் கோட்டிற்கும் நேரம் வேறுபடு கிறது. ஏன்? ஒவ்வொரு நெடுக்குக் கோட்டுக்கும் 4 நிமிட வேறுபாடு உள்ளதே இதற்குக் காரணம். இதனால் கிழக்கே சென்றாலும் மேற்கே சென்றாலும் நேரம் எவ்வாறு அமையும்? கிழக்கே சென்றால் நேரங் குறையும். மேற்க்ே சென்றால் கூடும். கிரீன்விச்சு நெடுக்குக்கோடு என்று எதற்குப் பெயர்? நெடுக்குக் கோடுகளில் இலண்டன், அருகிலுள்ள கிரீன்விச்சு ஆராய்ச்சிக் கூடத்தின் வழியாகச் செல்வது. முதன்மை நெடுக்குக்கோடு அல்லது கிரீன்விச்சு நெடுக்குக் கோடு ஆகும். கிரீன்விச்சு நெடுக்குக் கோடு எவ்வாறு குறிக்கப் படுகிறது? இது புவியின் ஒரு புறம் 0 என்றும் அதன் மறுபுறம் 100" என்றும் குறிப்பிடப்படும். குறுக்குக்கோடு என்றால் என்ன? அட்சக் கோடு. இது கிழக்கு மேற்காகச் செல்வது. உருண்டை வடிவாகப் புவி உள்ளதால், இதுவும் வட்ட வடிவமாகவே இருக்கும். இதன் இயல்புகள் யாவை? 1. இக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாகவே வரையப்படும்.