பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. 50. 51. 32. 35. 34. 41 காற்றுத்தொகுதி என்றால் என்ன? ஒரே இடத்தில் நீண்டநேரம் பெருமளவு காற்று தங்குமானால், அது காற்றுத் தொகுதியை உண்டாக்கும். வெப்பநிலைக்கு ஏற்றவாறு இத்தொகுதிகள் கதகதப் பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். நகரத் தொடங்கும் பொழுது, வானிலையில் இவை மாற்றங்களை உண்டாக் குபவை. தட்ப வெப்பநிலை என்றால் என்ன? வெப்பநிலை, ஈரநிலை முதலியவற்றைப் பொறுத்தவரை ஒரிடத்தின் அல்லது ஒரு நாட்டின் பருவ நிலை. தட்ப வெப்பநிலை மூலங்கள் யாவை? வெப்பம், காற்றழுத்தம், ஈரம் வடிதல், ஈரநிலை, காற்று. நான்கு வகைத் தட்ப வெப்பநிலைகள் யாவை? 1. முனைத் தட்ப வெப்பநிலை வடமுனை, தென்முனை. 2. வெப்பமண்டலத் தட்பவெப்ப நிலை. 3. கீழ்வெப்பமண்டலத் தட்ப வெப்பநலை. 4. சீரான தட்ப வெப்ப நிலை. பாலைவனங்களுக்கும் மலைகளுக்கும் தனி வகை வெப்ப நிலை உண்டு. தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை? 1. அட்சாம்சம். 2. கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு . 3. கடல்மட்டத்திலிருந்து உயரம். 4. மலைத்தொடர் அமைந்துள்ள திசையும் அதன் உயரமும், 5. வீசும் காற்றுகள். 6. கடல் நீரோட்டங்கள். தட்பவெப்ப நிலை தாவர வளர்ச்சியைப் பாதிக்குமா? பாதிக்கும். ஒவ்வொரு தட்பவெப்ப நிலையில் ஒவ்வொரு வகைத் தாவரம் வாழும். 1. மழைக்காடுகள் - நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள வெப்ப மற்றும் ஈரப் பகுதிகளில் வளர்பவை. 2. ஊசியிலைக் காடுகள் - வட பகுதியில் குளிர் பகுதி களில் வாழ்பவை. மேலும் வடக்கே செல்லப் பாசிகளும்