பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அண்டார்க்டிக். 1983 ஜூலையில் இங்கு வாங்தோக் தளத்தில் பதிவான வெப்பநிலை - 89.2 செ. 9. கண்டமும் நிலத்தோற்றங்களும் கண்டம் என்றால் என்ன? கடல் தரைக்கு மேல் எழும் பெரிய நிலத்தொகுதி. கண்டங்கள் எத்தனை? கண்டங்கள் ஏழு. ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா. - இவற்றில் சிறியது எது? பெரியது எது? சிறியது ஆஸ்திரேலியா. பெரியது ஆசியா. மூன்றாவது பெரிய கண்டம் எது? ஆப்பிரிக்கா. கண்டங்களின் பரப்பு என்ன? 149 மில்லியன் சதுர கி. மீ. கண்டக் கொள்கை யாது? எல்லாக்கண்டங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலத் தொகுதியாக இருந்தன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்டு அவை விலகத் தொடங்கின. இது பரவலாக உள்ள கொள்கை. கண்ட நகர்ச்சி என்றால் என்ன? ஒரு தனித்தொகுதியாகத் தோன்றிய புவிக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சார்பாக நகர்ந்து விடுகின்றன என்னுங் கொள்கை. இக்கொள்கையை உருவாக்கியர் யார்? இதை 1858 இல் ஏ. சிண்டர் என்பவர் உருவாக்கினார். 1912 இல் ஆல்பிரட் வேக்னர் விரிவாக்கினார். ஆசியாவின் இயற்கைப் பிரிவுகள் யாவை? 1. மைய மலைத்தொடர் 2. வடக்குத் தாழ் நிலங்கள்