பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. 49. 50. 51. 52. 55. 58 20 ஆகும் உச்சி முதல் அடிவரையுள்ள உயரமான மலை எது? ஆவாய் தீவுகளிலுள்ள மானா கியா என்னும் மலை உச்சி ஆகும். கடல் தரையிலிருந்து 1203 மீட்டர் உயர முள்ளது. இதில் பாதி (4.205 மீ) கடல் நீருக்கடியில் உள்ளது. சில உயர்ந்த மலைகள் மீது பனி இருப்பதேன்? கீழிருந்து நாம் மேலே செல்லும் பொழுது ஒவ்வொரு 1,000 மீட்டருக்கு 5° செ அளவுக்கு வெப்பநிலை குறைகிறது. உயர்ந்த மலைகளின் உச்சியில் மிகக் குறைந்த காற்று கோடையிலும் உள்ளதால் அங்குப் பனி உள்ளது. பிளவுப் பள்ளத்தாக்கு என்றால் என்ன? இரு பிளவுகள் ஒன்றுக்கொன்று அருகில் செல்லும் பொழுதுஅவற்றிற்கிடையே உள்ள நிலத்தொகுதி அமிழ்ந்து பிளவுப்பள்ளத்தாக்கை உண்டாக்கும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பெரும் பிளவுப் பள்ளத் தாக்கு ஆகும். இதன் நீளம் 6,400 கி.மீ. சிரியாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை செல்வது. பாறை என்பது யாது? நிலத் தோற்றங்களில் ஒன்று பாறை. பாறையின் வகைகள் யாவை? 1.நெருப்புப்பாறை - தொன்மை வாய்ந்தது. பாறைக் குழம்பு உறைந்து தோன்றுவது. இதிலிருந்து கிரானைட் பாறை தோன்றுகிறது. 2.படிவுப்பாறை சிதைவுறும் சிறுகற்கள், பெருமணல், மண், களிமண் முதலியவை படிந்து இறுகுவதால் இப்பாறை தோன்றுகிறது - கரிமப்பாறை. 3.உருமாறுபாதை வெப்பம் நீரோட்டம், நில அசைவு, அதிக அழுத்தம் முதலியவை காரணமாக நெருப்புப் பாறைகளும், படிவுப் பாறைகளும் உருமாறி வேறு உருவத்தை அடைகின்றன. சலவைக்கல் எவ்வாறு உண்டாகிறது? சுண்ணாம்புக்கல் உருமாறிச் சலவைக் கல் ஆகிறது.