பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. 55. 56. 59 பாறையடுக்கு என்றால் என்ன? பாறைக்கம்பமே பாறையடுக்கு. ஆர்க்னே தீவுகளில் காணப்படும். ஹோலி ஒல்டுமேன் (தூய முதுவர்) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. பெரும் பவழப் பாறைத்தொடர் (greatbarrierreef) என்றால் என்ன? ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரைக்கு இணை யாகச் சற்றேறக்குறைய 100 கி. மீ தொலைவில் உள்ள நீண்ட பவழப் பாறைத்திட்டு. இதன் நீளம் 2000 கி. மீ. கூரை விழுதுகளும் தரைவிழுதுகளும் என்றால் என்ன? கார்பனேட்டுப்படிகங்களாலான கல் விழுதுகள் கூரை யில் தொங்கியும் தரையில் நிலைத்தும் காணப்படும். இக்காட்சி சுண்ணாம்புக்கல் குகைகளில் காணப்படும். 10. எரிமலை வரலாற்றில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட எரிமலை வெடிப்பு எது? கி.பி. 74இல் வெசூயஸ் எரிமலை வெடிப்பு பதிவு செய்யப்பட்டது. இதுவரை எவ்வளவு எரிமலை வெடிப்புகள் ஏற்பட் டுள்ளன? சுமார் 2500 வெடிப்புகள். இவற்றில் பசிபிக் வளையத்தைச் சுற்றி ஏற்பட்ட வெடிப்பு கள் எத்தனை? ஏன்? இவ்வளையத்தில் 336 விழிப்புள்ள எரிமலைகள் உள்ளன. ஆகவே 2000 வெடிப்புகள் இங்கு ஏற்பட்டுள்ளன. எரிமலைகள் குறித்துத் திரட்டப்பட்ட தகவல்களால் நாம் அறிவது யாது? 1500 - 1914 வரை திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து 1,90,000 பேர் எரிமலை வெடிப்புகளால் இறந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.