பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. 11. 60 வெசூயஸ்சின் நிலை என்ன? அது பல தடவைகள் வெடித்துள்ளது. எரிமலை மெளனாலோவின் சிறப்பென்ன? எல்லா எரிமலைகளைவிட இது அதிக எரிமலைக் குழம்பை ஒட விட்டுள்ளது. ஜப்பானில் எரிமலைகள் நிலை என்ன? ஜப்பானில் எரிமலைகள் நிரம்ப உள்ளன. விழிப்புள்ள எரிமலைகள் உலகில் எங்குள்ளன? 62% பசிபிக் பெருங்கடல் விளிம்பிலும், 32% உலகின் மற்றப் பகுதிகளிலும் உள்ளன. விழிப்புள்ள எரிமலைகள் உள்ள நாடுகள் எவை? 1. ஜப்பான் - 50 2. குரில் தீவுகள் - 39 3. மைய அமெரிக்கா- 31 4. சிலி - 26 எரிமலையின் அமைப்பை விளக்குக. மேற்பரப்பில் பார்க்க, எரிமலை என்பது ஒரு குன்றே. கூம்பு வடிவத்தில் உள்ளது. இதன் குழாய் போன்ற பகுதியே திறப்பு ஆகும். இதன் வழியே வெளித் தள்ளப்பட்ட பொருள் செல்கிறது. வெளித்தள்ளப்பட்ட பொருள் ஒரு கூம்பை உண்டாக்கும். இதன் உச்சி தட்ட வடிவில் இருக்கும். இதுவே எரிமலை வாய். எரிமலை எவ்வாறு தோன்றுகிறது? அது எப்பொழுதும் எப்படியும் ஏற்படலாம். மெக்சிகோ கிராமவாசி ஒருவர் எரிமலை தோன்றியதைத் தம் கண்ணால் நேராகப்பார்த்துள்ளார்.1943 பிப்ரவரி மாதம் அவர் தம் வயலுக்குச் சென்றிருந்தார். அங்குத் திடீரென்று ஓர் உறுமல் ஒலியைக் கேட்டார். உடன் வெப்பப் பாறைகள் தரைக்கு மேல் உருண்டோடி வந்தன. ஒரு புதிய மலை உருவாயிற்று. தணல் சாம்பல், குழம்பு ஆகியவை உமிழப்பட்டன. சில மாதங்களுக்குப்பின் அது 1000 அடி உயரம் வளர்ந்தது. அடியில் அகலம் 3000 அடி