பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 13. 14. 15. 16. 17. 18. 61 எரிமலை தோன்றக் காரணங்கள் யாவை? 1. நிலையாக மாறும் கதிரியக்கப் பொருள்கள் உண்டாக்கும் வெப்பம் பாறைகளை உருகச் செய்கிறது. 2. உருகிய பாறைகளுக்கு அடியிலுள்ள வளிகள், நீராவி ஆகியவற்றின் அளவுகள் உண்டாக்கும் அதிக அழுத்தம். 3. நில நடுக்கங்களுக்கு எரிமலை அலைக்கழிவுகளோடு உள்ள தொடர்பு. நிலநடுக்கங்கள் உள்ள இடத்தில் எரிமலைகளும் இருத்தல் குறிப்பிடத்தக்கது. எரிமலையின் அறிகுறிகள் யாவை? உள்ளுர் நிலநடுக்கங்கள், நிலத்தடி இரைச்சல்கள், நீர் ஊற்றுகளின் ஓட்டத்திலும், வெப்ப நிலையிலும் மாற்றங்கள், எரிமலை வாயைச் சுற்றிலும் பல வகை வளிகள் தோன்றுதல் ஆகியவை காணப்படும். எரிமலையின் உடனிகழிச்சிகள் யாவை? தணல், சாம்பல், நீராவி, தூசி, குழம்பு, ஒட்டம், சேறு ஒட்டம், பெரும் கடல் அலைகள் தோன்றுதல், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவை. எரிமலையின் கால அளவு எவ்வாறு உள்ளது? சில நாட்களிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகள் வரை. தற்பொழுதுள்ள எரிமலைகள் பழங்காலத்தில் தோன்றியவை. எரிமலை எப்பொழுது தோன்றியது? புவி வரலாற்றில் நன்கு அறியப்பட்ட ஊழி தொல் ஊழி. இந்த ஊழிக் காலத்தில்தான் எரிமலை இயக்கம் தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது. எரிமலைகளுக்கும் நிலநடுக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமை யாது? இரண்டின் தோற்றமும் ஒன்றே. தட்டியக்கத்தால் தோன்றுபவை. எரிமலைகளும் நிலநடுக்கங்களும் எவ்விரு நிலைகளில் வேறுபடுகின்றன? அளவெண், வெடிப்பு ஆகிய இரண்டிலும் வேறு படுபவை.