பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. 20. 21. 22. 23. 24. 25. 26. 62 எரிமலை என்றால் என்ன? புவிக்கடியில் உருகிய நிலையிலுள்ள பாறைக்குழம்பு, தப்பிப் புவியின் மேற்பரப்புக்கு வருவதால் ஏற்படுவது எரிமலை. எரிமலையின் வகைகள் யாவை? 1. விழிப்புள்ள எரிமலை - இது அடிக்கடி எரிமலைக் குழம்பைக் கக்கும். 2. உறங்கும் எரிமலை ஏதோ ஒரு சமயம் குழம்பைக் 3. அற்றுப்போன எரிமலை அறவே குழம்பைக் கக்காதது. உலகிலுள்ள விழிப்பு எரிமலைகள் எத்தனை? கிட்டத்தட்ட 1300 எரிமலைகள். ஓராண்டுக்கு ஒரு முறை வெடிக்கும் எரிமலைகள் எத்தனை? 20 - 30 வரை. பெரும்பாலான எரிமலைகள் எங்கமைந்துள்ளன? தட்டுகளின் முனைகளுக்கு அருகிலுள்ள இடங்களில் உள்ளன. இத்தட்டுகள் புவி வெளிப்புற அடுக்குகளை உண்டாக்குபவை. விழிப்புள்ள எரிமலைகள் உலக அளவில் எவ்வாறு பரவியுள்ளன? 1. 45% கிழக்குப் பசிபிக் தீவு வளைவுகள் 2. 17% வட, தென் அமெரிக்கா 3.14% இந்தோனேஷியத் தீவு வளைவு 4. 13% அட்லாண்டிக் தீவுகள் 5.7% மையத் தரைப்பகுதி 6. 3% மையப் பசிபிக் 7.1% இந்தியப் பெருங்கடல் தீவு விழிப்புள்ள எரிமலைகள் பரவியுள்ள இரு வளையங்கள் யாவை? - 1. இந்தோனேஷிய வளையம் (93 எரிமலைகள்) 2. பசிபிக் வளையம் (307 எரிமலைகள்) எங்கு விழிப்புள்ள எரிமலைகள் அதிகமுள்ளன?