பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37. 58. 39. 40. 41. 42. 64 LucăruGégului i gil. (Shuttle Radar Topography mission) வண்ணத்தகவல் எவ்வாறு பெறப்பட்டது? இது 2000 ஜூலையில் பெறப்பட்டது. இதற்கு வெப்ப உமிழ்வும், எதிரொலிப்பும் கதிர்வீச்சுமானியும் பயன் படுத்தப்பட்டன. இப்படப்பிடிப்பின் பயன் யாது? மவுண்ட் ஒயாமாவின் தளவரைவை இப்படம் காட்டிற்று. இது செங்குத்தாகக் காட்டப்பட்டது. வடகிழக்கிலிருந்து தீவு நோக்கப்பட்டது. எரிமலைச் சாம்பல் இயல்பையும் அறிய முடிந்தது. இத்தகவல் எரிமலைக்குழம்பு ஒட்டத்திசையை முன்னறிந்து கூற உதவும். எரிமலை மிகு அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது? முறை 1. இதில் எரிமலையின் பரப்பிலுள்ள உருத்திரிபு கள் ஒரு நீட்சி மாதிரியோடு சேர்க்கப்படும். இதனால் வெடிப்பு இயக்கமும் உப்பலும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றன என்பது தெரிகிறது. - முறை 2. இதில் வெடிப்புத் துளைகளில் காற்றழுத்தம் அளக்கப்படுகிறது. பின் அது ஒடும் மாதிரியோடு இணைக்கப்படுகிறது. பாறைக் குழம்புத் தேக்கத் திலுள்ள அழுத்தத்தை மதிப்பிட இது செய்யப்படுகிறது. எரிமலை வகைகளின் சிறப்பென்ன? புவிக்குக்கீழ் நடைபெறுவது என்ன என்பதை அவை நமக்குத் தெரிவிப்பவை. இவ்வளியில் ஏற்படும் வேறுபாட்டைக் கொண்டு எரிமலை இயக்கத்தின் குறிப்பிடத் தகுந்த இயல்பை அறியலாம். எரிமலை வெடிக்கும் பொழுது வெளிவருவன யாவை? நச்சுப்புகை, எரிமலைச் சாம்பல், பழுக்கக் காய்ச்சிய இரும்பு, வெப்பத்திலுள்ள எரிமலைக் குழம்பு மற்றும் கந்தக வளிகள். எரிமலை இயக்கத்தின் இருவகைகள் யாவை? 1. வெடிப்பியக்கம் 2. பாறை இயக்கம்.