பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. 67. 68. 69. 70. 71. 68 ஐரோப்பாவில் விழிப்புள்ள ஒரே ஒரு எரிமலை எது? வெசுவியஸ். அனைத்துலக எரிமலை ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது? சிசிலி கேட்டானியா பல்கலைக் கழகத்தில் 1966 இல் நிறுவப்பட்டது. இத்தாலி ஆராய்ச்சி மன்றமும் யுனெஸ்கோவும் இதன் செலவுகளை (கருவி, பணியாளர்) ஒரளவை ஏற்றுள்ளன. எரிமலைத் தோற்றக் கொள்கைகள் யாவை? 1. நீர்த் தோற்றக் கொள்கை - பாறையடிகள் நீரிலிலிருந்து உண்டாயின. சேறு இறுகியதால் நீர் உண்டாயிற்று. இக்கொள்கையின் தலைவர் ஜெர்மன் கனிமவியலார் ஆப்பிரகாம் காட்லாப். 2. பாறைத் தோற்றக் கொள்கை - எரிமலை இயக்கம் மட்டுமே பல பாறையடிகளை உண்டாக்கிற்று. குறிப்பாக எரிமலைப் பாறையும்.கிரானைட்டும். இதற்குப் பிரஞ்சு இயற்கை ஆராய்ச்சியாளர் ஜூன் நெட்டார்டும், நிக்கோலஸ் டாமரெஸ்ட்டும் ஆதரவளித்தனர். 3. தட்டு அமைப்புக் கொள்கை - இது தற்காலக் கொள்கை. புவியின் மேற்பரப்பு பெரியதும் சிறியதுமான தட்டு களாகப் பிரிந்துள்ளது. அவற்றின் இயக்கம் எரிமலை களை உண்டாக்குகிறது. நல்ல கருவிகள் பொருத்தப்பட்டுள்ள எரிமலை எது? கிலாயி, ஹாவாய். - பத்தாயிரம் புகைப்பள்ளத்தாக்கு என்றால் என்ன? 1912இல் காட்மாய் எரிமலை வெடித்துப் பெரும் சேதத்தை உண்டாக்கிற்று. இதன் எச்சமாகத் தோன்றியதே இந்தப் பளளததாககு. எரிமலை பற்றிய சில உண்மைகள் யாவை? 1. புவியில் ஆழமாக ஒடும் நீர் சில வகை எரிமலைகளின் இருப்பிடத்தை விளக்கவல்லவை. 2. உலக எரிமலைகளில் பல அமைப்புத் தட்டுகளின் எல்லைகளுக்கிடையே உள்ளன. 3. கடல் மேல் ஒட்டுத்துண்டுகள் ஒன்றின் மீது