உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. 58. 59. 60. 61. 62. 78 சுனாமிகள் எங்கெங்கு ஏற்படுகின்றன? பசிபிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஏற்படுகின்றன. ஏற்பட்டுள்ள இடங்கள் பின்வருமாறு: ஐமய்கா, லிஸ்பன், ஜப்பான், சிலி, ஆன்கரேஜ், கிரகோட்டா, குச், கராச்சி, அலுவியன் தீவுகள். மிகப்பெரிய சுனாமி எப்பொழுது ஏற்பட்டது? 1755இல் லிஸ்பனில் ஏற்பட்டது. இறந்தவர்கள் 40,000 பேர். நிலநடுக்க முன்னறிவிப்பின் நோக்கமென்ன? உயிர்ச்சேதம் பொருள் சேதம் ஆகியவற்றை முடிந்த அளவுக்குக் குறைப்பதாகும். - நிலநடுக்க முன்னறிவிப்பிற்காகவுள்ள அனைத்துலக அமைப்புகள் எவை? நிலநடுக்கப் பொறியர் கழகம், நிலநடுக்க அனைத்துலகத் தகவல் நிலையம். நிலநடுக்கத்திற்குரிய முன்னறிவிப்புகள் யாவை? 1. பறவை, பாம்பு முதலியவை இடம பெயரல், சிம்பன்சி குரங்குகளில் நடத்தை மாற்றம் உள்ளது. 2. நிலநடுக்க அலைகளின் நேர்விரைவில் முன்னரே வழக்கத்திற்கு மாறான அதிர்வுகள் தோன்றுதல். 3. காந்த அளவீடுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு. 4. சீரான அதிர்ச்சிகள் இருத்தல். நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரிரு நாட்களுக்குமுன் இவை இருக்கும். 5. லேசர் கருவிகொண்டு அழுத்தத்தின் (stress) அறிகுறி களை அளக்கலாம். லேசர் திரிவுமானி வளைவில் ஏற்படும உயர்வைப் பதிவு செய்யவல்லது. 6. நீரின் ரேடான் அளவில் உயர்வு ஏற்படுதல். 7. நிலத்தடிநீர் மட்டங்ளில் மாற்றங்கள். 8. மின்காந்த விளைவுகள். 9. நீரில் ஈலியம் வளி அளவு சட்டென்று குறைதல். 1955இல் ஜப்பானில் ஒசாகாகோப். அதிர்ச்சியின் பொழுது ஈலிய உற்பத்திவீதம் குறைந்தது. நிலநடுக்கம் தாக்காத கட்டிடங்கள் எவ்வாறு அமைப்பது?