10. 80 510 மில்லியன் சதுர கி.மீ. கடலியல் வரலாறு யாது? 2000 ஆண்டுக்காலப் பதிவான வரலாறு உண்டு. 19ஆம் நூற்றாண்டில் கடல் ஆராய்ச்சி செம்மையுற்றது. இன்று அனைத்துலக அளவில கடல் ஆராய்ச்சி நல்ல முறையில் நடைபெறுகிறது. கடலியல் என்றால் என்ன? கடலின் பல இயல்புகளை விரிவாக ஆராயும் நில அறிவியல் துறைப் பிரிவு. கடலியலோடு தொடர்புடைய துறைகள் யாவை? புவிஇயல், புவி அமைப்பியல், புவிஇயற்பியல், வானிலை இயல், தொல்பொருள் இயல், நிலநடுக்க இயல். கடல் ஆராய்ச்சிக் கருவிகள் யாவை? நீர்வெப்பநிலை வரைவி, நிலநடுக்க வரைவி, நேன்சன் சீசாக்கள், நீரோட்ட அளவுமானி, மாதிரி எடுக்கும் கருவிகள், தொலைக்காட்சிக் கருவிகள், கடல்சறுக்கிகள், வானஊர்திகள், செயற்கை நிலாக்கள். பெருங்கடல் என்றால் என்ன? உலகப் பரப்பின் 3/4 பங்கை நிரப்பும் பரந்த நீர்ப்பரப்பு. பெருங்கடல்கள் எத்தனை? 1. இந்தியப் பெருங்கடல். 2. பசிபிக் பெருங்கடல். 3. அட்லாண்டிக் பெருங்கடல். 4. அண்டார்க்டிக் பெருங்கடல். 5. ஆர்க்டிக் பெருங்கடல். துணைக்கடல் என்றால் என்ன? ஒவ்வொரு பெருங்கடலுக்குமுள்ள சிறுகடல் துணைக் கடல் ஆகும். எ-டு, பசிபிக் பெருங்கடல்-கருங்கடல். பெரிய துணைக்கடல்கள் யாவை? 1. தென் சீனக்கடல். 2. கரிபீயன் கடல், 3. மையத் தரைக்கடல்.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/82
Appearance