பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 28. 29. 50. 31. 52. 55. 83 பெரிய பாறைத்துண்டுகள் ஆகியவற்றைக் கடல் தரையிலிருந்து கொண்டு வருகின்றன. புயல்களின் பொழுது, கரைக்கு எதிராகக் கொண்டு செல்கின்றன. இதனால் பாறைகள் மேலும் முறிபடுகின்றன. கடலிலிருந்து நாம் நிலத்தை மீட்க முடியுமா? முடியும். கடற்கரைச் சதுப்புநிலங்கள், ஆழமற்ற விரி குடாக்கள் ஆகியவற்றைக் கடலிலிருந்து மீட்கலாம். முதல்படிவழக்கமாகப் பாதுகாப்புச் சுவர் கட்டுவதாகும். கடல் நீர் பெருகுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு. பின் கடல்நீர் வெளியேற்றப்படும். உலர் நிலம் உண்டாகும். கடல்நீர் உப்புக்கரிப்பதேன்? ஆறுகள் கொண்டுவரும் கனிம உப்புகள் கடலில் கலப்பதால் கடல் உப்பு கரிக்கின்றது. இக்கனிமங்களில் அதிகம் இருப்பது சாப்பாட்டு உப்பு ஆகும். கடல்நீரிலுள்ள தனிமங்கள் யாவை? ஒவ்வொரு மில்லியன் டன் நீரிலும் 4கிராம் பொன் உள்ளது. தவிர அதில் வெள்ளி, கால்சியம், கந்தகம் உள்ளன. சில கடற்கரைகள் நீர்த்தடைகளைக் கொண்டிருப்பதேன்? கடலில் நெடுகச் செல்லுமாறு இத்தடைகள் அமைக் கப்படுகின்றன. கரைகள் கடலால் அரிக்கப்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாடு. எல் நீனியோ என்றால் என்ன? இது ஒர் அரிய நிகழ்ச்சி. நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுவது. இதன் நன்மை யாது? அமெரிக்கக் கண்டத்திற்கு அதிக மழையைக் கொடுப்பது. இதன் தீமைகள் யாவை? 1. பசிபிக் கடலுக்கு வறட்சியளிப்பது. 2. மலேரியா, காலரா முதலிய நோய்கள் ஏற்படவும், பசி, பட்டினி, வறட்சி, விளைச்சல் குறைவு உண்டாகவும் இது காரணம்.