பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. 45. 46. 47. 48. 49. 50. 85 களுக்கும் இடையில் உள்ளவை. கடல் அலைகள் என்பவை யாவை? காற்று வீசும் திசையில் கடல்நீரில் அசைவு ஏற்படுவ தைக் கடல் அலைகள் என்கிறோம். கடல் அலைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை? 1. கடற்கரைச் சரிவு. 2. காற்றின் விரைவு. 3. கடற்கரைப்போக்கு. பொதுவாக அலைகளின் வேலைகள் யாவை? 1. கரைத்து அழித்தல். 2. அரித்துத் தின்னல். 3. உராய்ந்து தேய்த்தல். 4. நீர்ஈர்ப்பு வாயிலாக அரித்தல். கடல் அலைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை? 1. காற்றுகள். 2. புவியதிர்ச்சி 3. நிலச்சரிவு. 4. கதிரவன் மற்றும் திங்களின் ஈர்ப்புவிசை. கடல் அலைகள் எவ்வாறு உண்டாகின்றன? நீர்மேற்பரப்பில் காற்றுகள் வீசுவதால் அலைகள் உண்டாகின்றன. நீரை மேல்நோக்கி வருமாறு காற்று வீசுகிறது. இப்பொழுது அலை முகடு உண்டாகிறது. பின் ஈர்ப்பு அதைப் பின்னோக்கி இழுப்பதால் அதை அலை அகடு ஏற்படுகிறது. இதுவரை உற்றுநோக்கப்பட்ட மிகப்பெரிய அலை எது? எப்பொழுது உற்றுநோக்கப்பட்டது? 1933இல் ஒரு கப்பல் பயணத்தில் புயலின்பொழுது உற்றுநோக்கப்பட்டது. உயரம் 34 மீ. கடல்களின் பண்புகள் யாவை? 1. கடல்நீர் கரிப்புள்ளது. 2. கடல்நீருக்கு வெப்பமுண்டு. 3. கடல்நீரை வெப்பப்படுத்தும் ஒரே ஆதாரம் கதிரவன் ஆகும்.