பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. 60. 61. 62. 87 4. ஆற்றோதங்கள் - ஆறுகளில் ஏற்படுபவை. 5. கலப்பு ஒதங்கள் உயர் ஒதமும் தாழ்ஒதமும் சேர்ந்தது. கடல் ஒதங்கள் அல்லது ஏற்றவற்றங்களின் நன்மைகள் யாவை? 1. ஓத ஏற்றத்தின்போது கடல் மட்டம் உயர்வதால் ஆற்று முகத்துவாரங்களில் நீர்மட்டம் உயர்கிறது. எனவே, கப்பல்கள் ஆற்றின் கரைகளிலுள்ள துறைமுகங்கள் வரை வந்து செல்ல முடிகிறது. காட்டாகக் கல்கத்தா துறைமுகம் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஹஅக்ளி ஆற்றில் ஏற்படும் ஒத ஏற்றம் பயன்படுகிறது. 2. ஒதங்களால் ஆற்றுப்படுகையின் வண்டல் படிவுகள் கடலில் கடத்தப்படுகின்றன. எனவே, ஆற்றுமுகத் துவாரங்கள் அகன்று ஆழம் மிகுந்து கப்பல் போக்கு வரத்திற்குப் பயன்படுகின்றன. சுழற்சிக் கொள்கை என்பது யாது? பெளவல், கில்பர்ட் ஆகியவர்களின் ஆராய்ச்சியால் சக்கர அரிப்புக் கருத்துத் தோன்றியது. நீரின் அரிப்பு விதியைப் பற்றி அறிந்து தெரிய இவ்விதி எல்லோரையும் தூண்டியது. ஆனால், சக்கர அரிப்பைப் பற்றிய தம் முறையை ஆராய்ச்சியை வெளியிட்டவர் எம். டேவிஸ் ஆவார். நீரியல் சுழற்சியிலுள்ள நிலைகள் யாவை? 1. ஆவியாதல். 2. குளிர்தல் 3. முகில்கள் தோன்றுதல். 4. மழைபொழிதல். 5. நீர்வழிதல். புவியின் நீர்ச்சமநிலை என்றால் என்ன? உலகநீர்ச் சுழற்சியில், மழை ஒன்றுதான் நீரைத்தருவது. புவியில் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 85.7 செ.மீ மழை பெய்கிறது. உலகின் நீர்ச்சமநிலையை அறிய, மொத்த மழைப் பொழிவை 100 மூல அலகாகக் கொள்ளலாம். இவ்வாறு புவியில் விழும் 100 மூல அலகு மழைப்பொழி