66. 67. 68. 69. 70. 96 இந்தியப் பெருங்கடலை உலக அளவில் ஆராயுந் திட்டம் எப்பொழுது தொடங்கிற்று? 1959இல் தொடங்கிற்று. இந்தியப் பெருங்கடலை ஆராயக் காரணங்கள் யாவை? 1. இறந்தொழிந்த பண்டைக்கால உயிர்களின் எச்ச மிச்சங்களை இதில் தேடிக் கண்டுபிடிக்கலாம். இது உயிரின் படிமுறை வளர்ச்சிக்கு உதவும். 2. உலகக் கடல்களிலேயே மீன் வளம் அதிகமுள்ளது இக்கடலே. 3. இக்கடல் கணிப் பொருள் களஞ்சியம். 4. இக்கடலில் காற்றோட்டங்களும் நீரோட்டங்களும் முழு அளவுக்குத் திசை மாறுகின்றன. - சோவியத்துக் கப்பல் ஆராய்ச்சி இந்தியப் பெருங்கடல் பற்றிப் புலப்படுத்தும் உண்மைகள் யாவை? சோவித்து நாட்டின் விட்யஸ் என்னும் கப்பல் 1959இல் இந்தியப் பெருங்கடலை ஆராய்ந்தது. அதன் முடிவுக Girnofor: - 1. இந்தியக் கடலின் தரை மிக அரிய அமைப்புள்ளது. கிழக்கு மேற்குப் பகுதிகளில் அதன் அமைப்பு பெருமள வுக்கு மாறுபடுகிறது. 2. தரை 8-15 மீட்டர் நீளத்திற்கிடையே உள்ள நான்கு உட்பகுதிகளைக் கொண்டது. 3. உட்பகுதிகளில் மீள்மாற்றங்கள் காணப்படுகின்றன. 4. நிலநடுக்க உற்றுநோக்கல்கள்: இந்தியக் கடலில் உள்ள தளர்ச்சியான படிவுகளின் தடிமன்100-200 மீட்டர். இந்தியப் பெருங்கடலின் கனிவளம் எவ்வாறு உள்ளது? 1. பொட்டாசியம், மக்னிசியம், மாங்கனீஸ், நிக்கல், கொபால்ட், செம்பு முதலியவை உள்ளன. 2. எண்ணெய்ப் படிவுகள் அதன் கரையோரங்களில் காணப்படுகின்றன. இந்தியக்கடல் ஆராய்ச்சியினால் ஏற்பட்டுள்ள கண்டு பிடிப்புகள் யாவை? - 1. பரந்த பள்ளத்தாக்கு ஒன்று இக்கடலில் உள்ளது. இதன்
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/98
Appearance