பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


பட்டதற்காகவும், மையம் 8 ஆம் ஆண்டு நிறைவைக்கொண்டாடவும் இது நடைபெற்றது.

35. ஒத்த இரட்டையர்கள் என்றால் என்ன?

ஒரே கருவணுவிலிருந்து தோன்றி ஒன்றை மற்றொன்று ஒத்திருக்கும். இது தனி உயிரிகள். எ-டு ஆர்காட் சகோதரர்கள். டாக்டர் இராமசாமி, டாக்டர் இலட்சுமணசாமி.

36. சியாமிய இரட்டையர்கள் என்றால் என்ன?

ஒரு தனி உயிரணுவிலிருந்து உண்டாகிய இரு தனி உயிர்கள். பிறப்பிலிருந்து ஒரு தசைக் கயிற்றினால் பிணைக்கப்ட்டிருக்கும். இச்சீன இரட்டையர் காலம் (1811-1874). இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பெயர் வழங்குவது நடைமுறையில் உள்ளது. :

37. குழந்தை வரும் நிலை என்றால் என்ன?

இடுப்புக் பகுதியில் குழந்தையின் பகுதியான தலை முன் வருதல்.

38. தொப்பூழ்க் குழி என்றால் என்ன?

கருவோடு சேர்ந்த கொடி இணையும் பகுதி.

39. நச்சுக்கொடி என்றால் என்ன?

சூல் கொடி வளரும் கருவைக் கருப்பையோடுஇணைத்து ஊட்டம் வழங்குவது.

40. குழந்தை நிலை என்றால் என்ன?

முதியவரிடம் குழந்தை இயல்புகள் குடி கொண்டிருத்தல். டிரண்டலன் பர்க் நிலை என்றால் என்ன? மகளிர் நோய் இயல் அறுவை நோயாளி மேற்கொள்ளும் நிலை. இடுப்பு வளையத்தைக் காட்டிலும் தலை தாழ்ந்தும், இவ்வளையம் முழங்கால்களைக் காட்டிலும் தாழ்ந்தும் இருக்கும். அதாவது நோயாளி தலைமாடு தாழ்வாகவும் கால்மாடு உயர்வாகவும் இருக்குமாறு படுக்கையில் படுத்திருப்பார்.

42. கிம் நிலை என்றால் என்ன?

பெண்களின் புணர்வழி ஆய்வுக்குரிய அரைக் குப்புற நிலை