பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

43. இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

1000த்தை நிலை எண்ணாகக் கொண்டு பிறப்பு இறப்பு அடிப்படையில் கணக்கிடப்படுவது.

44. ஆண்டு இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பதிவு செய்யப்பட்ட இறப்புகள் x 1000
அந்த ஆண்டு நடுப்பகுதி மக்கள் தொகை

45. குழந்தை இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒராண்டில் குழந்தை இறப்புகள் X 1000
பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்

46. தாய் இறப்பு வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கருவுற்று இறக்கும் பெண்கள் X1000
பதிவு செய்யப்பட்ட உயிருள்ள உயிரற்ற பிறப்புகள்.

47. பேற்றுத் துணை இயல் என்றால் என்ன?

பிள்ளைப்பேற்று நடவடிக்கைகளை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைக் கவனிப்பவர் பேற்றுத் துணைவி அல்லது மருத்துவச்சி.

48. செவிலியர் படிப்பு என்றால் என்ன?

நோயாளிகளையும் காயமுற்றோரையும் கவனிப்பதில் பயிற்சியளித்தல். பெண்களே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். செவிலியர் இல்லாத மருத்துவமனை இல்லை.


16. மக்கள் நல்வாழ்வு

1. பொது நல்வாழ்வு, தனி நல்வாழ்வு என்றால் என்ன?

குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி, ஊசி போடுதல் முதலியவற்றிற்கு அரசு ஏற்பாடு செய்து, இவற்றை மேம்படச் செய்கிறது. இவ்விரு துறைகளும் ஒன்றுடன் மற்றொன்று பின்னிப் பிணைந்தவை.

2. நல்வாழ்வு இயற்பியல் என்றால் என்ன?

அணு இயற்பியல் தொடர்பாக ஏற்படும் தீங்குகளிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் மருத்துவ இயல் பிரிவு.