பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


அமெரிக்க நுண்ணுயிர் இயலார் டாக்டர் ஜே.ஈ. சால்க் (1914-) மற்றும் இவர் தம் குழுவினர் உருவாக்கியது.


12. சாபின் ஆனவன் என்றால் என்ன?

உயிருள்ள ஆனால் வலுக்குறைந்த நச்சியங்களைப் பயன்படுத்தி ஆல்பர்ட் சாபின் என்பார் விழுங்கக் கூடிய மாத்திரைகளை உருவாக்கினார். இவை சாபின் ஆவைன் எனப் பெயர் பெறும்.


13.போலியோ ஒழிப்புத் திட்டம் என்றால் என்ன?

இது அனைத்துலகச் சுழற் சங்கத்தினரால் 1985 இல் தொடங்கப்பட்ட பெருந்திட்டம். இதனால் இலட்சக் கணக்கில் குழந்தைகள் பயனடைந்தனர்.


14.போலியோ என்றால் என்ன?

இளம்பிள்ளை வாதம். கொள்ளை நச்சுயிரியால் உண்டாவது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் கை கால்கள் விளங்கா. இதற்குச் சாபின் ஆவைன், சால்க் ஆவைன் ஆகிய இரண்டையும் முன்கூட்டியே பயன்படுத்தலாம்.


15.தடுப்பாற்றல் உருவாக்கல் என்றால் என்ன?

ஒர் உயிரியை நோய்க்குத் தடை தெரிவிக்குமாறு செய்தல். இது இயற்கைத் தடுப்பாற்றல், ஈட்டுத் தடுப்பாற்றல் என இருவகை.


16.இயற்கைத் தடுப்பாற்றல் என்றால் என்ன?

வெள்ளணுக்கள் மூலம் உடல் இயற்கையாகப் பெற்றிருக்கும் தடுப்பாற்றல். இது நிலைத்திருக்கும்.


17.செயற்கைத் தடுப்பாற்றல் என்றால் என்ன?

தடுப்பு மருந்துகளை உடலில் செலுத்திப் பெறுவது. இது தற்காலிகமாக இருக்கும்.


18.தடுப்புத் தெளிநீர் என்றால் என்ன?

எதிர்ப்புப் பொருள்களும் எதிர்ப்பாற்றலும் கொண்டுள்ள தனியாரிடமிருந்து பெறப்படும் குருதித் தெளிநீர்.


19.குழந்தைகள் ஆவைன் முயல்வுத் திட்டம் என்றால் என்ன?

இது ஒர் உலகத் திட்டம். யூனிசெப், உலக நல நிறுவனம் முதலியவற்றால் துவக்கப்பட்டது. ஒரே தடவையில்