பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


பேராற்றல் வாய்ந்தது. ஒடுங்கிய எண்கள், எழுச்சிகள், விருப்பங்கள், சிக்கல்கள் ஆகியவற்றின் உறைவிடம். இதை நன்கு ஆராய்ந்தவர் பிராய்டு.


10.உளப்பண்டுவம் என்றால் என்ன?

உளநோய்களைப் போக்கும் முறை. இந்நோய்கள் உளக் கோளாறுகளால் ஏற்படுபவை. அறிதுயில், கருத்தேற்றம், மருந்து முதலியவை உள நோய்களைப் போக்கப் பயன்படுபவை.


11.உளநோய் மருத்துவம் என்றால் என்ன?

உளநோயை அறிந்து குணப்படுத்தலை ஆராயும் மருத்துவப் பிரிவு. இதைச் செய்பவர் உளநோய் மருத்துவர்.


12.ஜான் கேட் என்பவர் யார்?

ஆஸ்திரேலிய உளநோய் மருத்துவர். இலித்தியத்தின் குணப்படுத்தும் பண்புகளைக் கண்டறிந்தவர். (1995)


13.பிராய்டு கொள்கை என்றால் என்ன?

ஆஸ்திரிய உளவியலார் (1856-1936) சிக்மண்டு பிராய்டின் கொள்கை நரம்புக் கோளாறுகளையும் உளக்கோளாறுகளையும் விளக்குவது. இதற்கு மாற்று உளநோய்ப் பண்டுவம். இவர் உளப் பகுப்பின் தந்தை.


14.உளப்பகுப்பு என்றால் என்ன?

மனித நடத்தையின் போக்கை உறுதி செய்வதில் நனவிலி நோக்கங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தும் உளவியல் கொள்கை. உளக்கோளாறுகளைப் போக்கும் ஒர் உளமருத்துவ முறையுமாகும். இதை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு.


15.இன்னாட்டம் (ld) என்றால் என்ன?

உளப்பகுப்பு அறிஞர் பிராய்டு பயன்படுத்தும் சொல். மகிழ்ச்சியடைவதையே குறிக்ககோளாகக் கொண்ட உளப்போக்கினைக் குறிப்பது.


16.உளநோயியல் என்றால் என்ன?

உளக்கோளாறுகளின் நுட்பத்தை ஆராய்தல்.


17. உளமருத்துவச் சமூகப்பணியாளர் என்பவர் யார்?