பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


கற்பவை உள்ளத்தால் நிலைத்து நிற்கும். நினைவுப் பயிற்சி, நினைவுக் குறிப்புகள் மூலம் மறதியைப் போக்கலாம்.


26.நினைவாற்றல் என்றால் என்ன?

பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவிலிருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். நினைவாற்றலும் உள்ளத்தின் ஒர் இயல்பு.


27.மிகை நினைவாற்றல் என்றால் என்ன?

நினைவாற்றலை மிகைப்படுத்துதல். பழங்காலப் பட்டறிவின் நுணுக்கமான விவரங்களும் இதில் அடங்கும். அதிர்ச்சிக்குப்பின் உடல் நலம் குன்றுபவர் களுக்கு ஏற்படுவது.


28.நினைவு கூர்தல் குறை என்றால் என்ன?

பொருள்களைப் பெயரிடவும் நினைவுகூர இயலாத நிலை.


29.நினைவிலிருத்தல் என்றால் என்ன?

பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல்.


30.இதை எவ்வாறு மதிப்பிடலாம்?

மீளாக்கம், நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை உற்றுநோக்கி இதனை மதிப்பிட வேண்டும். இது செறிவாக இருந்தால்தான், கற்றலும் செறிவாக இருக்கும்.


31.இயல்பூக்கம் என்றால் என்ன?

இயல்பாக உயிர்களிடம் அமைந்துள்ள சிக்கலான நடத்தைக் கோலம். ஆக்க ஊக்கம், ஆராய்வூக்கம், ஈட்ட ஊக்கம், குழு ஊக்கம், வியப்பூக்கம் என இது பலவகை.


32.நுண்ணறிவு ஆய்வுகள் என்பவை யாவை?

ஒரு கற்கும் திறமையை ஆய்ந்து பார்க்கும் ஆய்வுகள்.


33.நுண்ணுணர்வின்மை என்றால் என்ன?

புலன் உணர்வை அறிவதில் குளறுபடி.