பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


பான்மை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையறியும் நுணுக்கம். இதில் தகவல்கள் திரட்டப்பட்டு, அவற்றைக் கொண்டு ஆளுமையின் இயல்புகள் பின் அளக்கப்படுகின்றன.

54.நடத்தைக் கொள்கை என்றால் என்ன?

மனித வெளிப்படை நடத்தைகளைக் கொண்டது உளவியல் என்பது ஒரு கொள்கை.

55.இக்கொள்கையினர் கருதுவது என்ன?

இவர்களுக்கு உள்ளம், நனவு நிலை என்னும் கருத்துகளிலும் அகநோக்கு முறையிலும் நம்பிக்கை இல்லை.

56.திறமை என்றால் என்ன?

ஆளுமையின் உளவியல் இயல்பு, இதனால் குறித்த ஆக்கச் செயலை நிறைவேற்றலாம்.

57.இதன் வகைகள் யாவை?

1. தனித் திறமை - இசைத்திறமை 2. குழுத்திறமை - குழு விளையாட்டு.

58.திறமை வகைப்பாடு என்றால் என்ன?

நுண்ணறிவுத் திறன், வளர்ச்சி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் கற்பித்தலுக்காகக் குழந்தைகளை வகைப்படுத்தப் பள்ளிகளில் மேற்கொள்ளும் முறை. இது கல்வி வளர்ச்சியால் ஏற்பட்டது.

59.தன்னடக்கம் என்றால் என்ன?

தன்னிலும் உயர்ந்தோர் எனக் கருதப்படுவோர் முன் பணிவுடன் நடக்கத் துண்டும் இயல்பூக்கம்.

60.தன் முனைப்பாற்றல் என்றால் என்ன?

தனக்குக் கீழ் உள்ளோருடன் சேர்ந்து செயற்படுகையில், தான் மேல் என்று நினைத்து, அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துதல்.

61.பற்று என்றால் என்ன?

ஆள், பொருள் அல்லது கருத்துப்பற்றிய உணர்ச்சி களின் தொகுப்பு. பெதுவாக, விருப்பு வெறுப்பு ஆகிய இரண்டையும் பற்று உள்ளடக்கியது. சூழ்நிலைப்