இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
- பட்டறிவிற்கேற்ப உயர்வது.
62.உன்னிப்பு என்றால் என்ன?
- இது கவனம் என்னும் செயல்நாட்டம். நனவிலுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைப்பற்றித் தெளிவாக அறியும் முயற்சி. உன்னிப்புக் குட்பட்டவை, நன்கு குவிமையத்தில் இருக்கும். குழந்தையின் உன்னிப்பை ஈர்க்குமாறு கல்விச் செயல்கள் அமைய வேண்டும்.
63.நட்பு என்பது யாது?
- இத ஒர் இன்றியமையா உளத்தேவை மட்டுமன்று, சமூகத் தேவையும் கூட. இதன் வழி பாதுகாப்பு உணர்ச்சியும் பிறர் அன்பும் குழந்தைக்கு ஏற்படுவது. தொடர்ந்து வளர்வது.
64.கவர்ச்சி என்பது யாது?
- இருவருக்கிடையே உள்ள புலனறி விளைவாக எழும் உணர்ச்சி. இதனால் ஒருவர் மற்றவருக்கு இனியவராகத் தென்படுவார். இது ஒருவரின் பான்மையைப் பொறுத்தது. கவர்ச்சி உன்னிப்பின் அடிப்படை கற்றலில் முதன்மையான இடத்தைப் பெறுவது. காட்டாகப் பெரிய பொருளைவிடச் சிறிய பொருளே கவர்ந்திழுக்கும்.
65.திறன்கள் என்பவை யாவை?
- பயில்வோரின் ஆற்றல்கள். இவை கற்றலுக்கு அடிப்படையானவை. படித்தல்,எழுதுதல், எண் திறன் ஆகியவை அடிப்படைதிறன்கள். புனைதல், கண்டுபிடித்தல், வரைதல் முதலிய பயில்வோரின் திறன்களை வளர்ப்பதே கல்வியின் சிறந்த நோக்கம்.
66.கற்பனை என்றால் என்ன?
சாயல்களின் உதவிகொண்டு சிந்தித்தல் .
67.இக்கற்பனையின் வகைகள் யாவை?
- 1. அழகுணர்கற்பனை - மகிழ்வதே குறிக்கோள்.
- 2. பயனுள்ள கற்பனை - நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பது.
- 3. ஆக்கக் கற்பனை - பழைய பட்டறிவுகளின் சாயல்களைப் புதிய முறையில் அமைத்தல்.