பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


68அக்கறை என்றால் என்ன?

பயனுள்ளது, தேவையை நிறைவு செய்ய வல்லது. ஒரு வகைத் தாக்கத்தை ஏற்படுத்துவது. உன்னிப்பின் அடிப்படை


69.மடைமாற்றம் என்றால் என்ன?

தன் இயல்பான இலக்கிலிருந்து சமூகத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட வேறோர் இலக்கை நோக்கி இயல்பூக்கத்தை நல்வழிப்படுத்தல். பாலூக்கம்பற்றி உளப்பகுப்பாளர்களால் முதன்முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது.


70.கருத்தேற்றம் என்றால் என்ன?

கூறப்படும் செய்திகளின் உண்மையைச் சிந்திக்காமல், பிறர் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போக்கு. பொதுவாக, இது குழந்தைகளிடத்து காணப்படுவது. குழந்தைகளுக்கு அவர்கள் ஆசிரியர்கள் சொல்வதே வேதவாக்கு.


71.இதன் வகைகள் யாவை?

1. தற்கருத்தேற்றம்
2. எதிர்மறைக் கருத்தேற்றம்.


71.விருப்பாற்றல் என்றால் என்ன?

தன்னுடைய செயல்களையும் நடத்தையையும் மனிதன் தானே ஒழுங்குபடுத்தும் ஆற்றல். இலக்கை அடையவுள்ள இடர்களைப் போக்க உதவுவது. இவ்வாற்றல் இருந்தாலே எதையும் ஒருவர் செய்து முடிக்க இயலும். குழந்தைகளிடம் இது வளர்க்கப்பட வேண்டிய ஓர் ஆற்றல்.


72.குழந்தைப் பருவம் என்பது யாது?

ஏறத்தாழ 5 வயதிலிருந்து 12 வயது வரையுள்ள பருவம்.


73.குழந்தைகளை எத்தனை வகைகளாகப் பிர்க்கலாம்?

5 வகைகளாகப் பிரிக்கலாம்.

74.தனித்துள்ள குழந்தைகள் யாவை?

இவை பிறரது நட்பை விரும்புவதுமில்லை, பிறராலும் விரும்பப்படுவதில்லை.

ம - 8