பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


95. உளக்கோளாறு என்றால் என்ன?

கடும் உளப் பிறழ்ச்சி.

96. எழுத்தை அறியாமை என்றால் என்ன?

மூளை நைவுப் புண்ணினால் எழுதிய அல்லது அச்சடித்த சொல்லைப் புரிந்து கொள்ள இயலாமை.

97. பின்வாங்கல் என்றால் என்ன?

தன்னைத்தானே சுருக்கிக் கொள்ளுதல். அச்சமுறும் நிலையில் சரி செய்து கொள்ளும் இயல்பான முறை.

98. பித்து என்றால் என்ன?

கடும் உளக்கோளாறு.

99. தடுத்தல் என்றால் என்ன?

தடை. ஒரு செயல் நிறுத்தப்படுதல், எ-டு உளவியல் தடுத்தல்.

100. வெறி என்றால் என்ன?

தாழ்ச்சியுள்ள ஓர் உளக்கோளாறு. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி இருக்கும். முனைப்பான உளச்செயலும் வெளிப்படும். நோய்க் கூறுத் தூண்டலும் இருக்கும். தடுமாற்றமும் ஏமாற்றமும் இருக்கும்.

101. அச்சம் என்றால் என்ன?

குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் பய உணர்வு. வியர்த்தல் உண்டாகும். நரம்பு நோய் உள்ளவர்களிடமும் மூளை தோய் உள்ளவர்களிடமும் ஏற்படுவது.

102. இதன் வகைகள் யாவை?

நோயச்சம், சமூக அச்சம், இட அச்சம் திறந்தவெளி அச்சம், ஒளியச்சம் எனப் பலவகை. இவற்றை உளநோய்ப் பண்டுவத்தின் மூலம் போக்கலாம்.

103. விடாப்பிடி என்றால் என்ன?

தொடர்ந்து உண்டாகும் கருத்து அல்லது உணர்ச்சி. இதிலிருந்து நோயாளி தப்பிக்க முயல்வார்.

104. இல்பொருள் தோற்றம் என்றால் என்ன?

வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல் களிலிருந்து எழும் தோற்றம் அல்லது காட்சி. இதை