உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


நுகர்வோர் உண்மை எனக் கொண்டு நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள்.

105. இல்பொருள் தோற்றி என்றால் என்ன?

மனமயக்கத்தை உண்டாக்கும் மருந்து.

106. திரிபுத்தோற்றம் என்றால் என்ன?

புலன் உணர்வுகளுக்குத் தவறான பொருள் ஏற்படுவதால் ஏற்படுங்கட்சி, பழுதைப் பாம்பென்று நினைத்தல்.

107. அகநோக்கு என்றால் என்ன?

ஒருவர் தம் எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றில் மட்டுமே ஆழ்ந்திருத்தல்.

108. அகநோக்கர் என்பவர் யார்?

அகநோக்கு இயல்புள்ளவர்.

109. புறநோக்கு என்றால் என்ன?

வெளியுலக நிகழ்ச்சிகளில் மிக்க அக்கறையும் பிறருடன் பழகுவதில் பெரு விருப்பமும் கொண்டவரிடம் காணப்படும் ஆளுமைப்பண்பு.

110. புறநோக்கர் என்பவர் யார்?

புறநோக்குள்ளவர்.

111. இருநிலை உளத்திறன் என்றால் என்ன?

விருப்பு, வெறுப்பு ஆகிய எதிர் உணர்ச்சிகளை ஒருவ ரிடத்து ஒரு பொருள் தோற்றுவிப்பது என்பது உளப்பகுப்பாரின் அடிப்படைக் கருத்து.

112. நெறிபிறழ்வு என்றால் என்ன?

குழந்தை மற்றும் காளைப்பருவத்தினர் செயலைக் குறிப்பது. சடங்குகளுக்குப் புறம்பான சமூக நலமற்ற செயல்களில் ஈடுபடுவதை இது குறிக்கும். “தீயதேநல்லது” என்னும் செயல்பாட்டினைக் கொண்டது.

113. கும்பல் என்றால் என்ன?

குழுவின் கடைசிநிலை. தூசி பெறுமானமில்லா நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு பெரிதுபடுத்தி இயங்கும் கூட்டம் இது. இதற்குச் சிந்திக்கும் திறன் குறைவு. உளஎழுச்சி அதிகம். எ-டு வன்முறைக் கும்பல்.

114. தசைக்கேடுகள் என்றால் என்ன?