உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


பொது மருத்துவம், அறுவை மருத்துவம்.

7. மருத்துவத்தின் பெரும் பிரிவுகள் யாவை?

1. இதயவியல்9. மூப்பியல்
2. நரம்பியல்10. கருவியல்
3. முடநீக்கியல்11. மருந்தியல்
4. உட்கூறியல்12. உளமருத்துவம்
5. கண்ணியல்13. உணர்வகற்றியல்
6. காது மூக்கு-தொண்டை14. பதிய அறிவியல்
7. மகளிர் நோய்15. பல் மருத்துவம்
8. குழந்தை மருத்துவம்

ஒரு பெரிய மருத்துவமனை இவை அனைத்தையும் கொண்டிருக்கும்.

8. மருத்துவத்தின் துணைப்பிரிவுகள் யாவை?

1. வானப் பயண மருத்துவம்
2. மனை மருத்துவம்
3. அவசர மருத்துவம்
4. சூழ்நிலை மருத்துவம்
5. ஆய்வுநிலை மருத்துவம்
6. குடும்ப மருத்துவம்
7. தடயவியல் மருத்துவம்
8. அணுவியல் மருத்துவம்
9. உள -உடல் மருத்துவம்
10. விளையாட்டு மருத்துவம்
11. வெப்பமண்டல மருத்துவம்
12. கால்நடை மருத்துவம்
13. தடுப்பு மருத்துவம்

9. வானப்பயண மருத்துவம் என்றால் என்ன?

வானப் பயணத் தொடர்பாகவுள்ள சிச்கல்களை ஆராய்வது. இவை உடலியல், மருத்துவம், உளவியல், நோய் இயல் ஆகிய துறைகள் தொடர்பானவை.

10. மனைமருத்துவம் என்றால் என்ன?

நோயாளியின் நோய்களை நேரடியாக ஆராய்வது.

11. அவசர மருத்துவம் என்றால் என்ன?