118
ஒருவர் தம் சூழ்நிலையுடன் ஒன்றிச் செயற்படும் திறமை குறையும் பொழுது, அவரிடம் போராட்டங்கள் எழும். இவற்றிலிருந்து விடுபட அவரால் மேற் கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள். இவை, தீவிரமாயின் நெறிபிறழ்வு தோன்றும்.
115. பினே - சைமன் அளவுகோல் என்றால் என்ன?
குழந்தையின் நுண்ணறிவுத் திறனை அளக்கும் நுணுக்கம். பினே, சைமன் ஆகிய இருவரும் புகழ் பெற்ற பிரஞ்ச் உளவியலார். இவர்கள் அமைத்த அளவு கோல் இது.
18. பதிய அறிவியல்
1. பதிய அறிவியல் என்றால் என்ன?
பதியலியல். உறுப்புகள் உடலில் மாற்றிப் பொருத்தப் படுவது பற்றி ஆராயும் மருத்துவத்துறை.
2. அயலொட்டு என்றால் என்ன?
ஓர் உறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் ஒட்டுதல். சிறுநீரக ஒட்டு.
3. மயிர்ப்பதியன் என்றால் என்ன?
1959 இல் தொடங்கிற்றி. ஆண் வழுக்கைக்காக முதன் முதலில் மமிர்ப்பதியன் செய்தவர் ஆரன்டிரய்ச் என்னும் தோல் நோய் வல்லுநர்.
4. குருத்தெலும்பு வளர்ப்பு என்றால் என்ன?
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ் செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல். ஸ்விடிஷ் மருத்துவர்கள் காயமற்ற முழங் கால் மூட்டுகளைப் பல நோயாளிகளிடம் நன்கு சரி செய்துள்ளனர். (1994)
5. எலும்பு சோற்றுப் பதியன்கள் என்றால் என்ன?
எலும்புச் சோறு எலும்புகளின் மையத்திலுள்ளது.