பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


19. மருத்துவ நோபல் பரிசுகள்

1. தெளிநீர்ப் பண்டுவத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1901 இல் எமில் அடால்ப் வான் பெரிங் பெற்றார்.

2. அனோபிலிஸ் கொசு மலேரியாவைப் பரப்புகிறது என்பதற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1902 இல் சர் ரொனால்டு ராஸ் பெற்றார்.

3. லம்பஸ் வல்காரிஸ் என்னும் நோயைக் கதிர்வீச்சினால் குணப்படுத்தலாம் என்னும் பங்களிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1903 இல் நீல்ஸ் ரைபர்க் பின்சன் பெற்றார்.

4. செரித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1904 இல் ஐவன் பெட்ரோவிச் பாவ்லவ் பெற்றார்.

5. என்புருக்கி நோய் ஆராய்ச்சித் தொடர்பாக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1905 இல் இராபர்ட் காச் பெற்றார்.

6. நரம்பு மண்டல அமைப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1906 இல் கேமிலோ கோல்கை, சந்தியாகோ ரேமன் கஜால் ஆகிய இருவரும் பெற்றனர்.

7. புரோட்டோசோவா நோய்களைப் பரப்புகிறது என்னும் பணிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1907 இல் சார்லஸ் லூயி அல்போன்ஸ் பெற்றார்.

8. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
1908 இல் இல்யா இலியிக் மெக்னிகோவ், பால் எச்லிச் ஆகிய இருவரும் பெற்றனர்.

9. தொண்டைச் சுரப்பியின் அறுவை, நோய்த்தன்மை உடலியல்பு ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1909 இல் எமில் தியோடர் கோச்சர் பெற்றர்.

10. கண்ணறை வேதியியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு