பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


பரிசு பெற்றவர் யார்?
1924 இல் வில்லெம் எயின்மதாவன் பெற்றார்.

21. ஸ்பைராப்ட்ரா கார்சினோமோ கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1926 இல் ஜொகனஸ் அண்டிரியாஸ் கிரிப்பிபிஜர் பெற்றார்.

22. உளக்குறைப்பாட்டுப் பண்டுவத்தில் மலேரியா ஊசி போடுதலின் ஆற்றும் பண்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1927 இல் ஜூலியஸ் வேக்னர் - ஜாரெக் பெற்றார்.

23. டைபஸ் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1928 இல் சார்லஸ் ஜூல்ஸ் ஹென்றி ரிகோலே பெற்றார்.

24. நரம்புக் கோளாறு நீக்கு வைட்டமினைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1929 இல் கிறிஸ்டியன் எய்ஜக்மன் பெற்றர்.

25. வளர்ச்சி ஊக்குவிக்கும் வைட்டமின்களைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1929 இல் சர் பிரடரிக் கவ்லாந்து ஹாப்கின்ஸ் பெற்றார்.

26. மனிதக் குருதிப்பிரிவு வகைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1930 இல் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பெற்றார்.

27. மூச்சு நொதியின் இயல்பைக் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1931 இல் ஆட்டோ ஹெயின்ரிச் வார்பர்க் பெற்றார்.

28. நரம்பணுக்களின் வேலைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
1932 இல் சர் சார்லஸ் ஸ்காட் ஷெரிங்டன், கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆட்ரியன் ஆகிய இருவரும் பெற்றனர்.

29. மரபு வழியில் நிறப்புரியின் பங்கு பற்றிக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1933 இல் தாமஸ் ஹண்ட் மார்கன் பெற்றார்.