பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


களுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1950 இல் எட்வர்டு சால்வின் கெண்டால், டேடியஸ் ரெய்ஸ்டெயின், பிலிப் ஷோவால்டர் ஹென்க் ஆகிய மூவரும் பெற்றனர்.

47. மஞ்சள் காய்ச்சல் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1951 இல் மாக்ஸ் தெய்லர் பெற்றார்.

48. என்புருக்கி நோய்க்கு எதிராக முதல் உயிரி எதிர்ப்பு மருந்தான ஸ்டெரப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1952 இல் செல்மன் ஆப்பிரகாம் வாக்ஸ்மன் பெற்றார்.

49. நாரத்தைக் காடிச் சுழற்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1953 இல் சர் ஹேன்ஸ் அடால்ப் கிரப்ஸ் பெற்றார்.

50. துணை நொதி A அதன் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1953 இல் பிரிப்ஸ் ஆல்பர்ட் லிப்மன் பெற்றார்.

51. இளம்பிள்ளை வாத நச்சுயிரிகளின் வளர்ச்சித் திறனைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1954 இல் ஜான் பிராங்கிளின் எண்டர்ஸ், தாமஸ் ஹக்கிள் வெப்லர், பிரடடெரிக் சாப்மன் ஆகிய மூவரும் பெற்றனர்.

52. ஆக்ஸிஜன் ஏற்ற நொதிகளின் வினை ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1955இல் ஆக்சல் ஹயுகோ தியோடர் தியோரெல் பெற்றார்.

53. குருதி ஓட்ட மண்டலத்தில் ஏற்படும் நோய் நிலைமைகள், இதயச் செருகல் ஆகியவை குறித்த கண்டுபிடிப் பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1956 இல் ஆண்ட்ரி பிரடெரிக் கோர்னண்ட், வெர்னர் பார்ஸ்மன், டிக்கிசன் டபுள்யு ரிச்சர்ட்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.