பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


54.குருதிக்குழாய் மண்டலம், எலும்புத் தசைகள் ஆகியவற்றில் செயற்கைக் கூட்டுப்பொருள்களின் வினைத் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1957 இல் டேனியல் போவெட் பெற்றார்.


55.சில திட்டமான நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி மரபணுக்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1958 இல் ஜார்ஜ் வெல்ஸ் பீடில், எட்வர்டு லாரி டேடம் ஆகிய இருவரும் பெற்றனர்.


56.மரபணு மீள் கூடுகைக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1958 இல் ஜோஷ்வா எலடல்பெர்க் பெற்றார்.


57.ஆர்என்ஏ, டிஎன்ஏ ஆகியவற்றின் உயிரியல் தொகுப்பிலுள்ள நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1959 இல் செவரோ ஒக்கோயா, ஆர்தர் மெடாவர் ஆகிய இருவரும் பெற்றனர்.


58.ஈட்டிய தடுப்பாற்றல் பொறுக்குந்திறன் பற்றிக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1960 இல் சர் பிராங் மேக்பார்லேன் பர்னட், சர் பீட்டர் பிரியன் மெடாவர் ஆகிய இருவரும் பெற்றனர்.


59.காதுநத்தை எலும்பின் தூண்டுதல் பொறிநுட்பத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1961 இல் ஜார்ஜ் வான் பெகசி பெற்றார்.


60.உட்கரு அமிலங்களின் மூலக்கூறு அமைப்பு, அவற்றின் செய்தி அனுப்பும் சிறப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1962 இல் பிரான்சிஸ் ஹேரி காப்டன் கிரிக், ஜேன்ஸ் டுயி வாட்சன், உரமெளரைஸ் ஹயுஜ் பிரெடரிக் வில்கின்ஸ் ஆகிய மூவரும் பெற்றனர்.


61.நரம்புப் படல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?