பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


1969 இல் மாகிஸ் டெல் பிரேக், ஆல்பிரட் டி. ஹர்ஷே, சால்வடார் லூரியா ஆகிய மூவரும் பெற்றனர்.


69.நரம்பு முனைகளில் நரம்பு நீர்ச்செலுத்திகள் பற்றிக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1970 இல் பெர்னார்டு கட்ஸ், உல்ப் வான்யூலர், ஜூலியஸ் ஆக்சல் ராடு ஆகிய மூவரும் பெற்றனர்.


70.வளர்தூண்டிகளின் செயல் நுட்பத்தை ஆராய்ந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1971 இல் ஏர்ல் டபுள் யூ ஆர். சுதர்லாந்து பெற்றார்.


71.எதிர்ப்புப் பொருள்களின் வேதி அமைப்பை ஆராய்ந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1972இல் ஜெரால்டு எம், டெல்மன் ராட்னி, ஆர் போர்டர் ஆகிய இருவரும் பெற்றனர்.


72.தனிக் கோலங்களையும், சமூகக் கோலங்களையும் ஆராய்ந்து அவை தொடர்பாக நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1973 இல் கர்ல்வான் பிரிஷ், கோன்ராட் லாரன்ஸ், நிக்கோலஸ் டின்பர்ஜன் ஆகிய மூவரும் நோபல் பரிசு பெற்றனர்.


73.கண்ணறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1974 இல் ஆல்பர்ட் கிளாடி, கிறிஸ்டியன் டி டூவி, ஜார்ஜ் இ. பலாடி ஆகிய மூவரும் பெற்றனர்.


74.கண்ணறை மரபுப் பொருளுக்கும் கட்டி நச்சுயிரிகளுக்கும் இடையே நடைபெறும் வினையைக் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1975 இல் டேவிட் பால்டிமோர், ரெனடோ டல்பெக்கோ, வோவர்டு மார்டின், டெமின் ஆகிய மூவரும் பெற்றனர்.


75.தொற்று நோய்கள் தோற்ற நுட்பம் பற்றி ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1976 இல் பரூச் புளும்பெர்க், கார்ல்டன் கெய்டுசிக் ஆகிய இருவரும் பெற்றனர்.


76.மூளையில் பெப்டைடு வளர்தூண்டி குறித்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?