உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


1977 இல் ரோஜர் கயிலிமன், ஆண்ட்ருவ் வி.சேலி ஆகிய இருவரும் பெற்றனர்.


77.பெப்டைடு வளர்தூண்டியின் கதிர்வீச்சுத் தடுப்பாற்றல் மதிப்பீட்டிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1977 இல் ரோசலின் யாலோ பெற்றார்.


78.வரம்புடைய நொதிகள் பற்றிக் கண்டுபிடித்து அவற்றை மூலக்கூறு மரபியலில் பயன்படுத்தியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1978இல் வெர்னர் ஆர்பர், டேனிலல் நாதன்ஸ், ஹேமில்டன் ஒ. சிமித் ஆகிய மூவரும் பெற்றனர்.


79.கணிப்பொறி வழியமைந்த தள வரைவியலை உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1979இல் ஆலன் எம். கார்மக், சர் காட்பிரே என். ஹவுன்ஸ் பீல்டு ஆகிய இருவரும் பெற்றனர்.


80.கண்ணறை மேற்பரப்பில் மரபு வழி உறுப்புகளை உறுதி செய்து, அவற்றின் தடுப்பாற்றல் வினையைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1980 இல் பரூஜ பெனாசெரப், ஜீன் டாசெட் ஜார்ஜ் டி. ஸ்னெல் ஆகிய இருவரும் பெற்றனர்.


81.பெருமூளை அரைக் கோளங்களின் வேலைச் சிறப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

1981 இல் ரோஜர் டபுள்யு ஸ்பெரி பெற்றார்.


82.கண் பார்வை மண்டலத்தில் தகவல் முறையாக்கலைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1981 இல் டேவிட் எச். ஹீயுபல், டர்ஸ்டன் என். விசல் ஆகிய இருவரும் பெற்றனர்.


83.புராஸ்டாகிளாடின்கள் முதலிய வீறுள்ள உயிரியல் பொருள்களைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

1982 இல் சூன் கே. பெர்ஜ்ஸ்டாம், பென்ஜட் ஐ சாமுவல்சன், சர் ஜான் ஆர்.வேன் ஆகிய மூவரும் பெற்றனர்.

ம-9