உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134


10. இதயம், சிறுநீரகம், கண், நரம்பு மண்டலம் ஆகியவை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன.

11. இது தொடர்பான உடல் தொல்லைகளுக்கு மருத்துவரைக் கலந்து அறிவுரை பெறுவது நல்லது.

12. குறித்த நேரத்தில் உணவை உட்கொள்வது, மருத்துவரின் அறிவுரையின்பேரில் குறித்த நேரத்தில் தவறாமல் மருந்து உட்கொள்ளுவது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இந்நான்கும் நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாதவை.

2. பேறு காலத்தில்
பயன்படுத்தத்தக்க மருந்துகள்

1. நீர்ப்பெருக்கிகள்

2. டிஜாக்ஸின்

3. பீட்டா தடுப்பி

4. கால்சிய வழித் தடுப்பிகள் பயன்படுத்தலாம்.

5. சீரற்ற அதி இதயத் துடிப்பைக் குறைத்திடப் பயன்படுத்தும் லிடோகேய்ன் என்னும் மருந்து.

6. நைட்ரோபுரூசைடு, ஹைட்ரலாஸீன், நைட்ரோகிளிசரின், லெபீடலால் போன்ற மருந்து வகைகள் ஊசி மூலம் உயர் குருதி அழுத்தம் இருப்பின் கட்டுப்படுத்த உதவுபவை.