பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


7.ஆல்டோமெட் மாத்திரைகள் உயர் குருதி அழுத்தம் குறைய உதவுபவை.

8.இபாரின் என்ற ஊசி வழி செலுத்தும் மருந்து தேவைப்படின் பயன்படுத்தலாம்.

3. பேறு காலத்தில்
பயன்படுத்த தகாத மருந்துகள்

1.ஏன்ஜியோ டென்சின் தணிப்பிகள்

2.வார்ஃபாரின்

இந்த இருபிரிவிலும் உள்ள மருந்துகள் குறித்து மருத்துவரின் அறிவுரைப்படி செயல்படுதல் வேண்டும்.

4. இதயத் தளர்ச்சியை கண்டறியும்
பிராமிங்காம் முறைகள்

பெருஅளவு முறை

1.இரவு நேரத்தில் திடுமென்றோ படுக்கையில் இருக்கும் பொழுதோ மூச்சுவாங்கல் உண்டாகலாம்.

2.கழுத்துச் சிரைகள் பெருத்திருத்தல்.

3.நுரையீரல் சிற்றறைகளின் நீர்த்தேக்கத்தால் உண்டாகும் ஒலி.

4.இதயம் பெரிதாகுதல்.

5.திடுமென்று உண்டாகும் நுரையீரல் வீக்கம்.