பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13


32. தோலியல் என்றால் என்ன?

தோல்நோய்கள். அவற்றை இனமறிதல், பண்டுவம் செய்தல் ஆகியவற்றை ஆராயுந்துறை.

33. வானப்பயண மருத்துவம் என்றால் என்ன?

காற்று வெளிக்கு அப்பாலுள்ள பயணம் பற்றிய மருத்துவம். இது வானவெளிப் பயண மருத்துவமாகும்.

34. குழாய் வரைவு என்றால் என்ன?

குருதிக்குழாய்களை எக்ஸ் கதிர்ப்படம் பிடித்துப் பார்த்தல்.

35. மூட்டு வரைவியல் என்றால் என்ன?

கதிர் செல்லாப் பொருளைச் செலுத்திய பின், மூட்டை ஆராய்தல்.

36. மூளை வரைவியல் என்றால் என்ன? மூளையை எக்ஸ் கதிர் மூலம் ஆராய்தல்.

37. மருத்துவம் அடிப்படை அறிவியலா? பயன்படு அறிவியலா?

பயன்படு அறிவியல்.

38. மருத்துவத்தோடு தொடர்புள்ள அடிப்படை அறிவியல்கள் யாவை?

உயிரியல், இயற்பியல், வேதிஇயல், கணக்கு.

39. 1950களுக்குப் பின் தோன்றிய புதிய மருத்துவத் துறைகள் யாவை?

வானவெளி மருத்துவம், பதிய அறிவியல், தொலை மருத்துவம்.

40. வானவெளி மருத்துவம் என்றால் என்ன?

வானப் பயண மருத்துவத்தோடு தொடர்புள்ளது. வாணவெளியில் மூச்சுவிடுதல், எடைமிகு நிலை, எடையிலா நிலை, கதிர்வீச்சு முதலிய நிலைகளை ஆராயும் துறை. இவற்றை ஆராய்வதற்குரிய கருவிகள் செயற்கை நிலாவில் இருக்கும். பல ஆய்வுகளும் இவை தொடர்பாகச் செய்யப்பட்டுள்ளன.

41. தொலை மருத்துவம் என்றால் என்ன?

தொலைபேசி, மின்னஞ்சல், தொலைக்காட்சி ஆகிய கருவிகளை மருத்துவப் பயன்களுக்குப் பயன்படுத்தல்.