பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


இம் மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

4. உடம்பிற்கு மருந்து எப்பொழுது தேவை இல்லை?
உணவு நன்கு செரித்தபின், அளவோடு உண்டால் உடம்பிற்கு மருந்து தேவை இல்லை. அதாவது காலை 8 மணிக்குச் சிற்றுண்டி அருந்தினால் பகல் 12 மணிக்குப் பசி எடுக்க வேண்டும். பசி எடுத்தால்தான் காலை உண்ட சிற்றுண்டி செரித்துள்ளது என்பது பொருள்.

5. நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழி யாது?
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவே அறிந்து உண்ண வேண்டும். இதுவே நெடுங்காலம் வாழ்வதற்குரிய வழியாகும்.

6. எப்பொழுது எவ்வாறு உண்ண வேண்டும்?
முன் உண்ட உணவு செரித்தலை அறிந்து, மாறுபாடில்லாத உணவுகளை நன்றாகப் பசித்தபின் உண்ண வேண்டும்.

7. உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறாக இருப்பது எது?
நோய்

8. இதை எப்படி போக்குவது?
மாறுபாடு இல்லாத உணவை செரிக்கக்கூடிய உணவு, அளவு மீறாமல் (மீதூண் விரும்பேல்) மறுத்து உண்ண வேண்டும்.

9. குறைத்து உண்பவன் அதிகம் உண்பவன் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்கும். அதுபோல மிகப் பெரிதும் உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்கும்.

10. நோய்கள் எப்பொழுது அளவில்லாமல் ஏற்படும்?
பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், நோய்கள் அதிகம் உண்டாகும்.

11. நோயை போக்குவது எவ்வாறு?
நோய் இன்னதென்று அறிய வேண்டும். நோயின் காரணம் அறிய வேண்டும். அதைத் தணிக்கும்