பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


வழியையும் ஆராய வேண்டும். அது உடலுக்குப் பொருந்தும் படியாகச் செய்ய வேண்டும்.

12. ஆராயப்பட வேண்டியவை யாவை?
நோயாளி வயது, நோயின் அளவு, நோயின் காலம் ஆகியவற்றை மருத்துவர் ஆராய வேண்டும்.

13. மருந்தின் நான்கு வகைப்பாகுபாடு எது?
நோயாளி, மருத்துவர், மருந்து, உழைச்செல்வான் என்னும் நான்கு.

14. வள்ளுவர் போற்றும் மருத்துவம் எது? ஏன்?
சித்த மருத்துவம், இயற்கையோடு இயைந்தது. சித்தர்கள் கண்டது.

15. மருத்துவத்தின் எப்பிரிவுகளைத் தம் மருந்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை போற்றுகின்றார்?
உணவியல், மூப்பியல், அறிமுறை மருத்துவம், செயல்முறை மருத்துவம்,

4. சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும்

1. சித்த மருத்துவம் என்றால் என்ன?
சித்தர்கள் கண்ட தமிழ் மருத்துவம். இயற்கையோடு இயைந்தது. நீண்ட நெடிய வரலாறுள்ளது. இதைத் திருவள்ளுவரும் மருந்து என்னும் அதிகாரத்தில் சிறப்பிக்கின்றார்.

2. இதன் தனிச்சிறப்பென்ன?
1. காசு அதிகச் செலவின்றி அனைவருக்கும் பயன்படக் கூடிய மருத்துவம்.
2. மருந்தே உணவுப்பொருளாக அமைவதால் ஊறுபாடு இல்லை
3. சிறந்த உணவு நெறி.

3. சித்த மருத்துவத்தில் பயன்படக்கூடிய மருந்துகளின் வடிவம் என்ன?
பஸ்பம், செந்தூரம், மெழுகு மற்றும் மூலிகைகள்.