பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



4. சித்த மருத்துவத்தை வளர்த்தவர்கள் யாவர்?

பண்டைக் காலத்தில் வாழ்ந்த அறிவாளிகளும் சித்தர்களும் ஆவார்கள்.

5. சித்த மருத்துவத்தின் நோக்கம் என்ன?

பொதுமக்கள் நோயின்றி வாழ வேண்டும். நீண்ட காலம் உறுதியான உடம்புடன் வாழ வேண்டும்.

6. சித்தர்கள் வளர்த்த மற்றொரு கலை என்ன?

அறிவுக் கலையாகும்.

7. சித்தர்கள் 18 பேர் யாவர்?

1. திருமூலர். 10. கொங்கணர்.
2. இராமதேவர். 11. பதஞ்சலி.
3. கும்பமுனி. 12. நந்திதேவர்.
4. இடைக் காடர். 13. போதகுரு.
5. தன்வந்திரி. 14. பாம்பாட்டிச்சித்தர்.
6. வான்மீகி. 15. சட்டை முனி.
7. கமலமுனி. 16. சுந்தரானந்த தேவர்.
8. போக நாதர் 17. குதம்பைச் சித்தர்.
9. மச்சமுனி. 18. கோரக்கர்.

8. சித்தர் வைத்திய நூல்களை ஆராய்ந்த சித்தர்கள் யாவர்?

1. கோதமர். 10. நந்தீசர்.
2. அகத்தியர். 11. திருமூலர்.
3. சங்கரர். 12. காலாங்கி.
4. வைரவர். 13. மச்சமுனி.
5. மார்க்கண்டர். 14. புலத்தியர்.
6. வன்மீகர். 15. கருவூரார்.
7. உரோமர். 16. கொங்கணர்.
8. புசுண்டர். 17. போகர்.
9. சட்டைமுனி. 18. புலிப்பாணி.

9. சித்த மருத்துவத்தின் தனித் தன்மைகள் யாவை?

1. தென்னிந்தியாவில் மூலிகைகள், இரசவர்க்கங்களைக் கையாளும் அகத்திய வைத்தியம் காணப்படுகிறது. இரசவகைகளால் செய்யும் மருந்து முறைகள். தமிழ்நாட்டாருடைய தனிமுறைகளாகும்.