பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212. உலோகங்களையும் தாது வகைகளையும் கொண்டு செய்யப்படும் பஸ்பம், செந்தூரம், திராவகம் முதலிய பலகை முறைகள் வடமொழியிலுள்ள இரசாஸ்திரங்களுக்கு வேறுபட்டவைகளாக உள்ளன.
3. தமிழ் முறைகளின்படி உலோகங்கள், இரசவர்க்கங்கள் முதலியவற்றை நீற்றுப் பஸ்பம், சிந்தூரங்களாக எளிதில் செய்து விடலாம்.
4. செயநீரால் பாஷாண முதலியவைகளைக் கட்டி, சன்னி, வாதம் முதலிய மிகக் கடுமையான நோய்களுக்குக் கொடுப்பதால் குணம் ஏற்படுகிறது.
5. வடமொழியிலுள்ள ஆயுர்வேத நூல்களில் கூறப் பட்டுள்ளவாறு அப்பிரேகத்தை நூற்றுக்கணக்கான புடங்களில் எரித்தாலன்றி அதிலுள்ள மினுமினுப்பு நீங்குவதில்லை. ஆனால், தமிழ் முறைப்படி பத்துப் புடத்தில் மினுமினுப்பு மறைந்து பஸ்பமாகிறது. தவிர, அப்பஸ்பத்திற்கு வீறும் அதிகமாகும்.
6. கட்டு மருந்துகளை மிகக் கொடுமையான நோய் களுக்கு மிகவும் சிறிய அளவில் இரண்டு வேளைக்கு மேல் பயன்படுத்துவதில்லை. இவ்வகை மிகச் சிறந்த நூற்றுக்கணக்கான முறைகள் தமிழ் மருத்துவத்தில் உள்ளன.
7. நாடி பார்ப்பது சித்த மருத்துவத்திற்கே உரியது.
8. சாகாமல் வாழ மருந்துண்டு என்பது சித்த மருத்துவம்.
9. இரச, பாஷாண வகைகள் சித்த மருத்துவத்திற்கே உரியவை.

10. சித்த மருத்துவத்தைப் பற்றித் தமிழ் அறிஞர்கள் கருத்து என்ன?

சித்தர்கள் சிறந்த அறிவியல் அறிவு படைத்திருந்தனர். சித்த மருத்துவம் தமிழக அறிஞர்களால் கண்டுபிடிக்கப் பட்ட தனி மருத்துவம்.

11. சித்தர் பாடல்கள் கூறுபவை யாவை?

மருந்துண்ணாமல் உடலை நோயின்றி வைத்திருத்தல் பற்றிக் கூறியுள்ளனர். அது யோகத்தால் உடலைப் பாதுகாக்கும் வழி. இப்பாடல்கள் மருத்துவ நூல்கள்.