பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24



பற்றியும் பேசப்படுகின்றன.
4. ஆயுர் வேதம் மக்களுக்கச் சாவு உண்டு என்று ஒப்புக்கொள்கிறது.

26. யுனானி மருத்துவம் என்றால் என்ன?

மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு மருத்துவம். எல்லா நோய்களுக்கும் இதில் மருந்துண்டு.

27. நரம்பு மண்டலத்தைப் பயன்படுத்தும் யுனானி மருந்துகள் யாவை?

மக்சே வாஜான், ஜல்கோஷா, துக்மே ஷார் முதலியவை இலேகிய வடிவில் உள்ளவை.

28. யுனானி மருத்துவத்தைப் பரப்பும் மருத்துவ மாத இதழ் யாது? இதன் ஆசிரியர் யார்?

யுனானி மருத்துவம். ஆசிரியர் டாக்டர். ஹக்கீம் எஸ். ஏ. சையத் சத்தார்.

29. சித்த மருத்துவ வளர்ச்சிக்காகவுள்ள மைய அரசு அமைப்பு யாது?

மைய அரசு மன்றம். சித்த மருத்துவ ஆராய்ச்சி - ஆயுர்வேத ஆராய்ச்சி, அரும்பாக்கம், சென்னை - 106.

30. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காகவுள்ள தமிழ்நாடு அரசு அமைப்பு எது?

இந்திய மருத்துவ இயக்ககம்.

31. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழுவின் தலைவர்களாக இருந்தவர்கள் யார்?

என். கந்தசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம்.

32. ஆங்கிலத்திலுள்ள சிறந்த சித்த மருத்துவ நூல் எது?

History of Siddha Medicine, 1979. (N. Kandasamy Pillai)

33. தமிழிலுள்ள சிறந்த சித்த மருத்துவ நூல் எது?

சித்த மருத்துவச் சுருக்கம், 1983. (டாக்டர் க.சு. உத்தம நாராயணன்)

34. பேரறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை எங்குள்ளது?

அரும்பாக்கத்தில் உள்ளது. சென்னை 600 106.