பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2535. இம் மருத்துவமனையிலுள்ள பிரிவுகள் யாவை?

1. சித்த மருத்துவம் 2. ஆயுர் வேதம்
3. யுனானி 4. ஓமியோபதி
5. இயற்கை மருத்துவம் 6. யோகா

36. இங்குக் குணப்படுத்தப்படும் நோய்கள் யாவை?

1. தோல் நோய் 8 மகளிர் நோய்
2. தொண்டை நோய் 9. மூல நோய்
3. ஈரல் நோய் 10. உடல் ஊதல்
4. இரைப்பு 11. யானைக்கால் நோய்
5. நீரிழிவு 12. மஞ்சட்காமாலை
6. முதுகுத் தண்டு நோய் 13. எலும்பு முறிவு.
7. மலடு

37. அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் எத்தனை உள்ளன?

இரண்டு. சென்னை அரும்பாக்கத்தில் ஒன்று. பாளையங்கோட்டையில் ஒன்று. இவை தவிர தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் மூன்றும் உள்ளன.

38. அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி எங்குள்ளது?

திருமங்கலத்தில் உள்ளது.

39. யூனானி மருத்துவக் கல்லூரி எங்குள்ளது?

சென்னை அரும்பாக்கத்தில், அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளது.

40. சித்த மருத்துவ நூலகம் எங்குள்ளது?

அரும்பாக்கத்தில் அண்ணா மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது.

41. டேம்ப்கால் என்றால் என்ன?

தமிழ்நாடு மருத்துவத் தாவரப் பண்ணை - மூலிகை மருத்துவக் கழகம் என்பதாகும் (Tamilnadu Medicinal Plant Farms Herbal Medicine Corporation).

42. இதன் நோக்கம் யாது?

சித்த மருந்துகள் முதலான நாட்டு மருந்துகள் உற்பத்தி செய்வதாகும்.

43. இதன் பதிவு பெற்ற அலுவலகம் எங்குள்ளது?