பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27



2. சரகாவின் மருத்துவக் கருத்துகள் யாவை?

மூன்று தோஷங்கள் இருப்பதால் உடல் வேலை செய்கிறது. தோஷங்கள் என்றால் நீர்கள் என்பது பொருள். அவை முறையே பித்தநீர், சளி, காற்று. தோஷங்கள் தாதுக்களால் உண்டாக்கப்படுகின்றன. தாதுக்கள் என்பவை குருதி, சதை, எலும்புச்சோறு ஆகிய மூன்றுமாகும். இத்தாதுக்கள் உணவோடு வினைப்படும் பொழுது தோஷங்கள் உண்டாகின்றன. ஒரே அளவு உணவுவை ஒருவர் உட்கொண்டாலும் வேறுபட்ட தோஷம் ஒவ்வொரு உடலிலும் உண்டாகிறது. இதனால்தான் ஒர் உடல் மற்றொரு உடலிலிருந்து எடை, வலிமை, ஆற்றல் ஆகியவற்றில் வேறுபடுகிறது. இம்மூன்று தோஷங்களின் சமநிலை குலையும் பொழுது, நோய் உண்டாகிறது. இச்சமநிலை மீண்டும் ஏற்பட மருந்துகள் கொடுக்கப்படவேண்டும்.

3. சரகாவின் மரபணு அறிவை விளக்குக.

ஒரு குழந்தையின் பாலை உறுதி செய்யும் காரணிகளை அவர் அறிந்திருந்தார். நொண்டி, குருடு என்னும் குறைகள் விந்தணு அல்லது கருமுட்டையில் ஏற்படும் குறையினால் உண்டாகுபவை. இது மெண்டல் கருத்துக்கு உடன்பாடே.

4. சரகாவின் தவறான கருத்து யாது?

இதயம் ஒரே குழியாலானது என்று கருதியது.

5. சரகாசமிதாவின் சிறப்பென்ன?

அத்ரேயா என்பார் பழங்கால மருத்துவர். அக்னிவேசா கி.மு. 8ஆம் நூற்றாண்டில் ஒரு மருத்துவ நூலை எழுதினார். சரகா இதைத் திருத்தி எழுதினார். இதுவே சரகாமிதா. இது மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. ஈராயிரம் ஆண்டுகள் மருத்துவத்தில் தரமான நூலாக விளங்கியது. அரபு மொழி, இலத்தின் மொழி முதலிய அயல்மொழிகளில் பெயர்க்கப்பட்டது

6. சரகாசமிதா என்னும் தம் நூலில் அவர் குறிப்பிடுவன யாவை?

உரிய அறிவுடன் ஒரு நோயாளியின் உடலில் மருத்துவர்