பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


12.சுஸ்ருதா எவ்வாறு மூக்கறுவை செய்தார்?

நோயாளிக்கு ஒரு குவளை மது அளித்தார். தோட்டத்திலிருந்து ஒரு படர்கொடியின் இலை ஒன்று கொண்டு வந்தார். நோயாளியின் மூக்கை அளந்தார். கவரிலிருந்து ஒரு கத்தி, ஒரு சாமனம் ஆகிய இரண்டையும் எடுத்தார். அவற்றைத் தீயில் காட்டினார். அவற்றைக் கொண்டு கன்னத்திலிருந்து சிறிது சதையை வெட்டி எடுத்தார். நோயாளி அலறினார். ஆனால், மது அவரின் புலன்களை அடக்கியது. கன்னத்திற்குக் கட்டுப் போட்டார். பின் நோயாளியின் மூக்குத் துளைக்குள் இரு குழாய்களைச் செலுத்தினார். சிதைந்த மூக்கில் கன்னத்திலிருந்து எடுத்த சதையை ஒட்டினார். மூக்கை ஒரு வடிவத்திற்குக் கொண்டு வந்தார். சந்தனத்துள், இந்திய பார்பரிச் செடிச்சாறு, அதிமதுரத்துள் ஆகியவற்றை அறுவை நடந்த இடத்தில் தெளித்தார். நல்லெண்ணெய்த் துளிகளையும் புண்ணில் தெளித்தார். இறுதியாகப் பஞ்சை வைத்துக் கட்டுப் போட்டார். நோயாளிக்கு உரிய மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். மருந்துகளும் மூலிகைகளும் கொடுத்தார். இந்த ஒட்டு அறுவை 26 நூற்றாண்டுகளுக்குமுன் செய்யப்பட்டது. வரலாற்றுச் சிறப்புள்ளது.

13.தொடக்க காலத்தில் நம் நாட்டில் மயக்க மருந்துகளாகப் பயன்பட்டவை யாவை?

மது, கள்.

14.சுஸ்ருதசமிதா எம் மொழியில் பெயர்க்கப்பட்டது?

அரபு மொழியில் பெயர்க்கப்பட்டது.


6. பண்டுவம்

1.பண்டுவ இயல் என்றால் என்ன?

நோயைக் குணமாக்குதலைப் பற்றிக் கூறும் மருத்துவப் பிரிவு.

2.நீர்ப்பண்டுவம் என்றால் என்ன?