பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


21. போல்யா அறுவை என்றால் என்ன?

முன் சிறுகுடல் புண் அறுவை. இதில் இரைப்பையின் அடி நடுச் சிறுகுடலுடன் இணைக்கப்படும்.

22. நுணுக்கம் என்றால் என்ன?

ஓர் உறுப்பை அறுவை மூலம் நீக்குதல் குடல் வால் நுணுக்கம்.

23. கீறல் என்றால் என்ன?

ஓர் உறுப்பைக் கீறி குணப்படுத்தல். எ-டு. சுரப்பிக்கீறல்.

24. முன்பொட்டுக்கீறல் என்றால் என்ன?

சில உளக்கோளாறுகளை நீக்கச் செய்யப்படுவது. இதில் முன்பொட்டு மடல்கள் மூளையின் எஞ்சிய பகுதியிலிருந்து அறுவை முறையில் பிரிக்கப்படும்.

25. இரைப்பைத் திறப்பு என்றால் என்ன?

இரைப்பையில் செயற்கைத் திறப்பு உண்டாக்கிக் குழாய் உணவு செலுத்தல்.

26. தட்டிப்பார்த்தலின் பயன் யாது?

உடலைத் தட்டிப் பார்க்கும்பொழுது உண்டாகும் ஒலி. நோயறியப் பயன்படும்.

27. துளைத்து வடித்தல் என்றால் என்ன?

உடற் குழியிலிருந்து பாய்மத்தை வடித்தல்.

28. மூளைச் செயல் நீக்கம் என்றால் என்ன?

ஆய்வு நிலையில் மூளைச் செயலை நீக்குதல்.

29. துணித்தாய்தல் என்றால் என்ன?

உயிரியிலிருந்து ஒரு பகுதித் திசுவைப் பிரித்தெடுத்து நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தல். அதன் நோய்த் தன்மைகளை ஆராய்தல்.

30. விந்துகுழல் நுணுக்கம் என்றால் என்ன?

விந்துகுழல் ஒவ்வொன்றின் பகுதியை அறுவை மூலம் நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தனுக்கள் சேர்வது தடுக்கப்படும். இது ஆண்களுக்குரிய குடும்பக் கட்டுப் பாட்டு முறை.

31. திரிநரம்புக் கீறல் என்றால் என்ன?

திரி நரம்புகளைப் பிரித்தல். இந்நரம்பு 10ஆம் மூளை