பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


மருத்துவத்தில் பயன்படுவது.

17. பேரியக் குடல் கழுவல் என்றால் என்ன?

வாய் வழியாகப் பேரியம் சல்பேட் உட்கொள்ளப் படுதல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி ஆய்வுக்கு ஏற்றதாகும்.

18. பேண்டிங் பத்திய உணவு என்றால் என்ன?

அதிக உடல் பருமனைக் குறைக்க எடுத்துக் கொள்ளப்படுவது. உயர் புரத அடக்கமும் குறைந்த மாப்பொருள் அடக்கமும் உள்ளது.

19. முழங்கால் மறிவினை என்றால் என்ன?

முழங்கால் உதறல். முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால் கால் முன்தள்ளப்படுதல். இது மருத்துவர் செய்யும் ஆய்வு.

20. வயிற்றறை நோக்கல் என்றால் என்ன?

இடுப்புப் பகுதிகளை அகநோக்கி மூலம் ஆராய்தல். இது வயிற்றுறை வழி ஆராயப்படும். இதற்குப் பயன்படும் கருவி வயிற்றறை நோக்கி.

21. குணப்படுத்தல் என்றால் என்ன?

நோய் அல்லது உறுப்புச் சிதைவைப் போக்குதல். உறுத்துணர்ச்சி என்றால் என்ன? தூண்டலுக்கேற்ற துலங்கல். உயிரியின் இயல்புகளில் ஒன்று.

23. கலோரி என்றால் என்ன?

வெப்ப அலகு. ஒரு கலோரி வெப்பம் என்பது ஒரு கிலோ கிராம் நீரை ஒரு செல்சியஸ் பாகைக்கு உயர்த்த தேவையான வெப்பம்.

24. ஒரு கிராம் மாப்பொருள் தரும் வெப்பம் எவ்வளவு?

4.1 கலோரி.

24. (அ) ஒரு கிராம் புரதம் தரும் வெப்பம் எவ்வளவு?

4.1 கலோரி.

25. ஒரு கிராம் கொழுப்பு தரும் வெப்பம் எவ்வளவு?

9.3 கலோரி.

26. வெப்ப நிலை என்றால் என்ன?