உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


உடலின் ஒரு பகுதியில் குருதி சேர்தல்.

36. காரத்தேக்கம் என்றால் என்ன?

குருதியில் காரப்பண்பு மிகுந்திருத்தல்.

37. நீட்டல் என்றால் என்ன?

முறிந்த உறுப்பை நேராக வைத்தல்.

38. இதற்குரிய இரு முறைகள் யாவை?

1. தோல் இழுப்பு 2. எலும்பு இழுப்பு.

39. அறிகுறி என்றால் என்ன?

நோய்த்தன்மையின் வெளிப்பாடு, இது உடலிலும் உடற்செயல்களிலும் மாற்றங்களை உண்டாக்கும். காட்டாக, நீர்க் கொள்வதற்கு அறிகுறியாகத் தும்மல் வரும்.

40. சுழற்சி என்றால் என்ன?

நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் வருந் தொடர். எ-டு. இதயச்சுழற்சி.

41. உயிர்த்தலின்மை என்றால் என்ன?

மூச்சுவிடல் இல்லாத நிலை. இறப்பின் அறிகுறி.

42. மூச்சு ஈவு என்றால் என்ன?

மூச்சுவிடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி இரு ஆக்சைடு பருமனுக்குமுள்ள வீதம். இது வழக்கமாக 0.8.

43. ஆக்சிஜன் ஏற்றம் என்றால் என்ன?

ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயணிகள் சேர்தல் அல்லது நீர்வளி நீங்கல், சிதை மாற்றம் உயிர் வாழத் தேவைப்படும் ஓர் அடிப்படைச் செயல்.

44. ஆக்சிஜன் செலுத்தல் (உயிர்வளி) என்றால் என்ன?

மூச்சுப்பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக உயிர்வளியைச் சேர்த்தல்.

45. ஆக்சிஜன் கடன்பாடு என்றால் என்ன?

கடும் பயிற்சியின்பொழுது உயிர்வளிக் குறைவால் தசைகளில் பால்காடி குறைதல்.

46. ஆக்சிஜன் ஈவு என்றால் என்ன?