பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளியை நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை.

47. உயிர்வளி செலுத்தல் நடைபெறும் வழிகள் யாவை?

1. மூக்குச் செருகிகள் மூலம் செலுத்தல். ஒரு நிமிக்கு 4 லிட்டர், இது மூச்சுச் சிற்றறை உயிர்வளியை 30% அளவுக்கு உயர்த்தும்.
2. உயிர்வளிக் கூண்டு. இதில் மூச்சுச் சிற்றறை உயிர்வளி 45% இருக்கும்.
3. முகமூடி. இதில் மூச்சுச் சிற்றறை உயிர்வளி 90% இருக்கும்.

48. உயிர்ப்புத்திறன் என்றால் என்ன?

ஆழ்ந்த உள்மூச்சிற்குப்பின், நுரையீரல்களிலிருந்து வெளித் தள்ளப்படும் காற்றின் மொத்த அளவு. இது மனிதனிடம் 3400-4000 க.செ.மீ. அளவில் உள்ளது.

49. பயட் மூச்சுவிடல் என்றால் என்ன?

முப்படல அழற்சியின் பொழுது காணப்படுவது. மூச்சு விடுவதில் இடைநிறுத்தங்கள் இருக்கும். ஆனால், செயினி - ஸ்டோக்ஸ் மூச்சு விடுதலில் உள்ளது போன்ற ஏற்றம் இறக்கம் இரா.

50. மூப்படைவு என்றால் என்ன?

வயது ஆக ஆக உள்ளமும் உடலும் இயல்பாக மாற்றம் அடைதல்.

51. வளர்சிதை மாற்றம் என்றால் என்ன?

அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம் சிதைமாற்றம் என இரு நிலைகளைக் கொண்டது. எ-டு. உணவு தன்வயமாதல், அதாவது திசுவாகி வளர்ச்சி ஏற்படுதல், வளர்மாற்றம். சிதைமாற்றம் அழிவு மாற்றம். உயிர்வளி ஏற்றம் திசுக்களில் நடைபெறுவதால் ஆற்றல் உண்டாதல்.

52. இறப்பு என்றால் என்ன?

திசுக்களில் வளர்சிதை மாற்றம் அறவே ஒடுங்குவதால் ஏற்படும் நிலை. திசு மூச்சு நிற்றல்.