40
64. நீக்கல் என்றால் என்ன?
உடலில் ஓர் உறுப்பு அல்லது பகுதியை நீக்குதல். இதனால் அவ்வுறுப்பு வேலை செய்தல் இல்லாமல் போகும்.
65. தக அமைதல் என்றால் என்ன?
புதிய சூழ்நிலைகளுக்கேற்ப அமைப்பு அல்லது வேலை மாற்றங்களை மேற்கொள்ளுதல். எ-டு. வெளிச்சத்தில் இருந்து இருட்டிற்குச் செல்லும்பொழுது கண் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுதல்.
66. கண்டம் என்றால் என்ன?
ஒரு நோயின் முடிவு நிலை. இதிலிருந்து நோயாளி குணமடையலாம் அல்லது நோய் தீவிரமடையலாம். இறப்பும் நிகழலாம்.
67. தளவரைவியல் என்றால் என்ன?
இது ஒரு நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம், இதில் எக்ஸ் கதிர்களால் படம் பிடிக்கப்படுகிறது.
68. பரப்பு வரைவியல் என்றால் என்ன?
உடல் பரப்புகள் பலவற்றையும் ஆராய்தல்.
69. அகவாக்கம் என்றால் என்ன?
குடலின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்குள் செல்லுதல். 3-9 மாதங்களுக்கு இடையில் ஏற்படும். இதனால் குடல் தடை ஏற்படும். இதனால் குருதியும் சளியும் குதம் வழியாகச் செல்லும். அடிக்கடி வாந்தி இருக்கும். உடன்
செய்யப்படவேண்டியது வயிற்றறைத் திறப்பு ஆகும்.
70. குளிர்ப்பாய்மம் என்றால் என்ன?
குளிர்விக்கப் பயன்படும் நீர் அல்லது வளி
71. நீர்க்குளியல் என்றால் என்ன?
27° செ. உள்ள நீர். இது உடல் திசுக்களை ஊக்குவிக்கும்.
72. கதகதப்பான நீர்க்குளியல் என்றால் என்ன?
வெப்பநிலை 40° செ. உள்ள நீர்.
73. வெந்நீர்க் குளியல் என்றால் என்ன?
இதன் வெப்பநிலை 42° செ. இவ்விரண்டும் வலியைத்